அண்ணன் வேலைக்கு போன பிறகு வீட்டுக்கு வருவது.. 4 வருடமாக அண்ணியை மிரட்டி பலாத்காரம்.. காமுகன் கைது
டெல்லி: தனது அண்ணியை துப்பாக்கி முனையில் மிரட்டியே, 4 வருடமாக பலாத்காரம் செய்து வந்த காமுகன் கைது செய்யப்பட்டான்.
அம்மா மாதிரி நினைக்கப்பட வேண்டியவர் அண்ணி. ஆனால், டெல்லி அருகே குருகிராமில் அவரையே தாரமாக நினைத்துள்ளான் ஒரு காமுகன்.

குருகிராமின் பஜ்கேரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணுக்கு 9 வருடம் முன்பு திருமணமானது. 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் வீடு அருகேயே, அந்த பெண்ணின் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரர் வீடு உள்ளது.
பெண்ணின் கணவர் காலையில் வேலைக்கு போய்விட்டு, மாலையில்தான் வீடு திரும்புவார். இந்த இடைவெளியில், நைசாக வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக்கியுள்ளார், அந்த காமுகன்.
ஒருகட்டத்தில், தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால், குழந்தைகளையும், கணவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில்தான், சில தினங்கள் முன்பு, அந்த பெண்ணின் கணவருக்கு விஷயம் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விவரம் சொல்லியுள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார், அந்த காமுகனை கைது செய்துள்ளனர். போலீசார், இந்திய தண்டனைச் சட்டம், 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தனது குழந்தைகளை கொன்றுவிடுவதாக அச்சுறுத்தியதால் இந்த விஷயத்தை வெளியே கூறவில்லை என போலீசில் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
