Budget 2025: AI உலகில் விளையாட காத்திருக்கும் இந்தியா.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். உலகம் முழுவதும் AI குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா இந்த துறையில் முன்னேற என்னென்ன தேவை என்பது குறித்த எதிர்பார்புகளை நிபுணர்கள் வழங்கியுள்ளனர்.
AI உலகில் பெரிய போட்டி நிலவி வருகிறது. இதனை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள சில வாய்ப்புகள் இருக்கின்றன. அதை பயன்படுத்த வேண்டும் எனில், சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டி உள்ளது. என்ன மாற்றங்கள் தேவை? பட்ஜெட்டில் இது குறித்த எதிர்பார்ப்புகள் என்ன? என்பது குறித்து சில எதிர்பார்ப்புகளை 'Ernst & Young' வெளிப்படுத்தியுள்ளது.

கணக்கியல் மற்றும் தொழில்முறை சேவை நிறுவனங்களில் மிகப்பெரிய 4 நிறுவனங்களைதான் Ernst & Young என்று அழைப்பார்கள். alongside Deloitte, PwC, KPMG இதுதான் இந்த 4 பெரிய நிறுவனங்கள். இவைதான் இந்தியா AI துறையில் முன்னேற சில எதிர்பார்ப்புகளை முன்வைத்திருக்கின்றன.
1.உள்கட்டமைப்பு மேம்பாடு
2.டேட்டா அணுகல் மற்றும் பாதுகாப்பு
3.ஒழுங்குமுறை கட்டமைப்பு
4.தொழிலாளர்களை மேம்படுத்துதல்
இவை நான்கும் இந்தியாவுக்கு கிடைத்தால், நாடு நிச்சயமாக AI துறையில் சீனா, அமெரிக்காவுக்கு இணையான வளர்ச்சியை அடையும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிறுவனங்கள் தவிர வேறு சில நிறுவனங்களும் சில ஆலோசனைகளையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்திருக்கின்றன. EY இந்தியா நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனை பங்குதாரரான ஹரி பாலாஜி கூறுகையில், "இந்தியாவில் AI தொழில்நுட்பங்களை வளர்க்க ரூ.10,400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. AI தொழில்நுட்பத்தை பயிற்சி செய்யவும், மேம்படுத்தவும் உயர் செயல்திறன் GPUs மற்றும் டேட்டா சென்டர்கள் மீது ஒதுக்கப்பட்ட நிதி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
AI தொழில்நுட்பத்திற்கு GPUs மிக முக்கியமானதாகும். இன்று AI உலகை கலக்கி வரும் chat GPT, Gemini, DeepSeek உள்ளிட்டவை GPUs மூலமாகத்தான் இயங்கி வருகிறது. அதேபோல மேற்குறிப்பிட்ட நிதியானது AI குறித்து ஆய்வு செய்யவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தொழில்நுட்ப துறையில் மட்டும் கெத்து காட்டி வரும் AI, இனி வரும் காலங்களில் மருத்துவம், கல்வி, நிதித்துறை ஆகியவற்றிலும் பயன்படுத்தபட வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
அடுத்த 18-24 மாதங்களுக்குள் சுமார் 10,000 GPUsகளை இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் ஹரி எதிர்பார்க்கிறார். அமெரிக்கதான் இந்த GPUsகளை அதிக அளவில் தரமாக தயாரிக்கிறது. மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கு இதை விற்பனை செய்யவும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அப்படி இருக்கையில், இந்தியா இதனை எப்படி பெறப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. மட்டுமல்லாது AI தொழில்நுட்பத்திற்கான தரவு களஞ்சிய தொகுப்பு தளத்தை(Datasets Platform) உருவாக்க வேண்டும் என்றும் ஹரி எதிர்பார்க்கிறார்.
மற்ற நாடுகளிலிருந்து AI தொழில்நுட்பத்தில் இந்தியா எந்த புள்ளியில் வேறுபட்டு நிற்கிறது என்பதை அடிகோடிட்டுள்ள ஹரி, உள்ளூர் மொழிகளை AI-க்கு பயிற்றுவிப்பதன் மூலம், இந்தியாவில் இதன் பயன்பாடு பரவலாக இருக்கும் என்று கூறியுள்ளார். உதாரணமாக தமிழ்நாட்டில் ஒருவர் தமிழில் சில கேள்விகளை கேட்க விரும்புகிறார் எனில், அதற்கு சரியான பதில்கள் கிடைப்பது சவாலானதாக இருக்கிறது. தெலுங்கு, மலையாளம், கனடா, ஒடியா, குஜராத்தி, மராத்தி என எல்லா மொழிகளுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.
இதில் தனி கவனம் செலுத்தி AI உருவாக்கப்பட்டால் அது இந்தியாவில் சக்கைபோடு போடும் என்று ஹரி கூறுகிறார். உங்களுக்கு AI குறித்து என்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications