பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோருக்கு ரூ 2 கோடி வரை கடன் திட்டம்! பட்ஜெட்டில் அறிவிப்பு
டெல்லி: பட்டியலின, பழங்குடியின பெண் தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு தலா ரூ 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2025- 2026 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினர்.

பிறகு நிர்மலா சீதாராமனை பேச விடாமல் கூச்சலிட்டனர். எனினும் அமளிக்கு மத்தியில் அவர் பட்ஜெட் உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
பட்டியலின, பழங்குடியின பெண் தொழில் முனைவோர்களாக 5 லட்சம் பேருக்கு தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும். இந்திய அஞ்சல்துறை லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
மாநிலங்கள் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ 1.50 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தொடர்பான படிப்புகளுக்கு 3 சிறப்பு மையங்கள் ₹500 கோடியில் அமைக்கப்படும். அது போல் விவசாயத்திலும் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்படும். குழாய் மூலம் குடிநீர் அளிக்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படும்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது. உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications