Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட் கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து! கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில் கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகின்றனர். அவர்கள் மீதான நடவடிக்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றிருக்கிறது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது 5 ஆண்டு காலத்தின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடர் இதுதான். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 9ம் தேதி வரை நடைபெறுகிறது. மரபுப்படி இன்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்.

Budget session 2024: Suspension of opposition MPs revoked

ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில், ஏராளமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். குளிர்கால கூட்டத் தொடரின்போது இளைஞர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் புகை குப்பிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலையின்மைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடாக பார்க்கப்பட்டது. எனவே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

இந்தியா கூட்டணியை சேர்ந்த எம்பிக்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆனால் பதாகைகளை ஏந்த அனுமதி இல்லை என்று கூறி அந்த எம்பிக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். இப்படியாக மக்களவையில் 100 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 46 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இந்த அளவுக்கு எம்பிக்கள் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது.

இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்,

காங்கிரஸ் கட்சியின் கே.சுரேஷ், பிரமோத் திவாரி, திமுகவின் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய், சமாஜ்வாதியின் எஸ்.டி.ஹாசன், ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்குர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் ஜெயதேவ் கல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக விளக்கமளித்த ஜோஷி, "எம்பிக்கள் ரத்து செய்யப்பட்டதை நீக்க வலியுறுத்தி நான் மக்களவை சபாநாயகர், மாநிலங்களவைத் தலைவரிடம் பேசியிருக்கிறேன். அரசு சார்பாக அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இடைநீக்கம் ரத்து சபாநாயகர், மக்களவைத் தலைவரின் அதிகார வரம்புக்குள் வருகிறது.

எனவே சம்மந்தப்பட்ட சிறப்புகுழுக்களைத் தொடர்பு கொண்டு இடைநீக்கத்தை ரத்து செய்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அவைக்கு வர வாய்ப்பளிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளோம். இருவரும் அதற்கு சம்மதித்துள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் நாளை கூட்டத்தொடரில் கலந்துகொள்வார்கள்" என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து 14 எம்பிக்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+