ஜனாதிபதிக்கு தமிழ் பாரம்பரிய செங்கோல் மரியாதை.. புதிய நாடாளுமன்றத்தில் முதல் என்ட்ரியே செம்ம
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழ் பாராம்பரிய முறையான செங்கோல் கொண்டு வரவேற்பளிக்கப்பட்டிருக்கிறது. குதிரைப்படையில் பிரம்மாண்ட வரவேற்புடன் வந்து இறங்கிய குடியரசுத் தலைவருக்கு செங்கோல் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது ஐந்தாண்டை வரும் மே மாதத்துடன் நிறைவு செய்கிறது. மோடி தலைமையிலான அரசின் 10ஆண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நாடாளுன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் பட்ஜெட் என்பதால் இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படும்.

அதேநேரம் நாடாளுமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் இன்று காலை குடியரசு தலைவர் திரவுபதி முர்னுவின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்காக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இரு அவை உறுப்பினர்களும் கூடியுள்ள அரங்கிற்கு குதிரைப்படைகள் சூழ பிரம்மாண்ட வரவேற்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்முக்கு அளிக்கப்பட்டது. குதிரை வண்டியில் வந்திருக்கிற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு செங்கோல் கொண்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
#WATCH | Budget Session | President Droupadi Murmu arrives at the Parliament for her address to the joint session of both Houses. Sengol carried and installed in her presence. pic.twitter.com/vhWm2oHj6J
— ANI (@ANI) January 31, 2024
நாடாளுமன்றத்தில் இசை வாத்தியங்கள் முழங்க செங்கோலை முதலில் ஒருவர் கையில் ஏந்திச் செல்ல, பாதுகாப்பு வீரர்கள் சூழ, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உள்ளே வந்தார். புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் முதன்முறையாக வருகை தந்த குடியரசு தலைவரை, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்கள். அதன்பின்னரே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையை வாசித்தார்.
அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகையில், புதிய நாடாளுமன்ற கட்டத்தில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்று வரகிறது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரித்துள்ளது. உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.
பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை மிகவும் எளிதாகியிருக்கிறது. தினசரி ஒரு லட்சம் கோடி அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடக்கிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவத்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது. கடந்த மாதம் மட்டும் 1200 கோடி அளவிற்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. செல்போன் உற்பத்தியில் உலகில் 2வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 2 காலாண்டுகளாக 7.5 சதவீதத்திற்கு மேல் உள்ளது. நிலவின் தென் துருவத்தில் கொடி ஏற்றிய முதல் நாடு இந்தியா" என்றார்.












Click it and Unblock the Notifications