ராஜஸ்தானில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.. பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்! மீட்பு பணி தீவிரம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளில் 15 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இரவு 9 மணியளவில் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், மீட்பு பணிகள் நள்ளிரவை தாண்டியும் நீடித்து வருகிறது.
ராஜஸ்தான் மநிலம் கோட்டாவில் சனிக்கிழமை இரவு மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இடிந்து விழுந்த கட்டிடத்தில் உணவு விடுதி செயல்பட்டு வந்துள்ளது. இரவு உணவு விடுதிக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 8 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் வரை கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மொத்தம் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்ற உறுதியான எண்ணிக்கை விவரம் தெரியவில்லை.
ராஜஸ்தான் மாநில கல்வித்துறை அமைச்சர், கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இடிந்து விழுந்த கட்டிடம் அருகே ஒரு கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விரிசல் ஏற்பட்டு மூன்று மாடி வணிக கட்டிடம் இடிந்து விழுந்து இருக்கலாம் என்று முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
கட்டிடம் மிக பழமையான கட்டிடம் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறினர். கட்டிடம் இடிந்து விழும் போது வெடி சத்தம் போல பயங்கரமாக கேட்டதாக உள்ளூர் வாசிகள் கூறினர். போலீசாருடன் இணைந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடிந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டிடம் பழமையானதா? அதற்கு நோட்டீஸ் எதுவும் விடுக்கப்பட்டு இருந்ததா? என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications