சீனியர்களுக்கும் செக்.."ஸ்டிரிக்ட்" நடவடிக்கை எடுத்த மோடி.. பெரிய அமைச்சரவை மாற்றம்.. என்ன காரணம்?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமான மூத்த அமைச்சர்கள் நீக்கப்பட்டு, இளம் அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர்.
பிரதமரின் அமைச்சரவையில் 81 அமைச்சர்கள் வரை இடம்பெற முடியும். தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 53 அமைச்சர்கள் மட்டுமே இருந்தனர். இதில், 9 தனி அதிகாரம் கொண்ட இணை அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் இருந்தனர்.
இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த 4 வாரங்களாக ஆலோசனை நடந்து வந்தது. புதிய அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பாகவும், செயல்படாத அமைச்சர்களை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடந்தன.

ஆலோசனை
சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய காட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், அக்கட்சிகளிடம் இருந்த அமைச்சர் பொறுப்புகள் காலியாக இருந்தது. இந்த காலியிடங்களை நிரப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மிக தீவிரமாக அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். பல்வேறு உயர்மட்ட கூட்டங்கள் நடைபெற்றன.

கூட்டங்கள்
தொடர் கூட்டங்கள், ஆலோசனைகளை தொடர்ந்து தற்போது 12 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சில இணை அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களாக புரொமோஷன் பெறுவது உட்பட மொத்தம் 43 அமைச்சர்கள் புதிதாக இன்று பதவி ஏற்று உள்ளனர். மத்திய அமைச்சரவையில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக இது பார்க்கப்படுகிறது.

புதிய அமைச்சர்கள்
மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் புதிய 43 அமைச்சர்கள்
நாராயணன் ரானே
சர்பானந்த சோனோவால்
வீரேந்திர குமார்
ஜோதிராதித்ய சிந்தியா
ராம்சந்திர பிரசாத் சிங்
அஸ்வின் வைஷ்ணவ்
பாஸுபதி குமார் பராஸ்
கிரண் ரிஜிஜு
ராஜ்குமார் சிங்
ஹர்தீப் சிங் புரி
மன்சுக் மன்தாவியா
பூபேந்தர் யாதவந்
புருஷோத்தம் ரூபாலா
கிஷன் ரெட்டி
அனுராக் சிங் தாக்கூர்
பங்ஜக் சவுத்ரி
அனுப்ரியா சிங் படேல்
சத்ய பால் சிங் பாகல்
ராஜீவ் சந்திரசேகர்
சோபா கராண்டஜே
பானு பிரதாப் வர்மா
தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்
மீனாட்சி லேகி
அனுபமா தேவி
நாராயணசாமி
கவுஷல் கிஷோர்
அஜய் பட்
பி எல் வர்மா
அஜய் குமார்
சவுகான் தேவ்சிங்
பகவந்த் கூபா
கபில் மோரேஷ்வர் பாட்டீல்
சுஷ்ரி பிரதிமா பவுமிக்
சுபாஷ் சர்கார்
பகவத் கிஷன் ராவ் காரத்
ராஜ்குமார் ரஞ்சன் சிங்
பாரதி பிரவீன் பவார்
பிஷ்வேஸ்வரர் துடு
சாந்தனு தாகூர்
முஞ்சபரா மகேந்திர பாய்
ஜான் பார்லா
எல் முருகன்
நிஸித் பிரமானிக்

நீக்கம்
மொத்தம் 12 பேர் எந்த புதிய பொறுப்பும் கொடுக்கப்படாமல் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சதானந்த கவுடா
ரவி ஷங்கர் பிரசாத்
தாவர்சந்த் கெஹ்லாட்
ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்
டாக்டர் ஹர்ஷ் வர்தன்
பிரகாஷ் ஜவடேக்கர்
சந்தோஷ் குமார் கங்வார்
பாபுல் சுப்ரியா
தோற்றே சஞ்சே
ரத்தன் லால் கட்டாரியா
பிரதாப் சந்திர சாரங்கி
தபஸ்ரீ சவுத்திரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

துணிச்சல்
பிரதமர் மோடி மிகவும் துணிச்சலாக இந்த மிகப்பெரிய அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். முக்கியமாக மூத்த அமைச்சர்கள் ரவி ஷங்கர் பிரசாத் , ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க், டாக்டர் ஹர்ஷ் வர்தன், பிரகாஷ் ஜவடேக்கர் போன்றவர்களை நீக்கி உள்ளார். எந்த விளைவு, எதிர்ப்புகளை பற்றியும் கவலைப்படாமல் உண்மையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.

தாராளம்
அதேபோல் பாஜக வலிமையாக இருக்கும் மாநிலங்களுக்கு கூடுதல் அமைச்சர் பொறுப்புகளை கொடுத்துள்ளார். பீகாரில் பாஜகவின் கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 அமைச்சரவை பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் 7, குஜராத்தில் 5, மகாராஷ்டிராவில் 5, கர்நாடகாவில் 4 என்று பல்வேறு மாநிலங்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளன.

கூட்டணி
கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்குவதில், பல்வேறு பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் பிரதமர் மோடி இந்த முறை அதிரடி காட்டி உள்ளார். தமிழகம் உட்பட 8 மாநிலங்களின் 12 தலித்துகளுக்கு மத்திய அமைச்சர் பதவி ஏற்றுள்ளனர். அருணாச்சல் பிரதேசம் உட்பட 8 மாநிலங்களின் 8 பழங்குடியினருக்கு மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. 15 மாநிலங்களின் 27 ஓபிசியினருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்
பிராமணர், பனியா, லிங்காயத் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 29 பேருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் 11 பேர் பெண்கள் இடம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டன கொரோனா இரண்டாம் அலை தொடங்கி பொருளாதாரம் வரை பல்வேறு புகார்கள் வைக்கப்பட்டன.

5 மாநிலம்
இந்த விமர்சனங்கள்தான் அமைச்சரவை மாற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் இந்த விமர்சனங்கள் மத்திய அரசுக்கு எதிராக பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் மூத்த அமைச்சர்கள் உட்பட பலரை நீக்கி அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார். எந்த விதமான பூசல் எதிர்ப்பும் இன்று பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார்.

மோடி 2.0
பிரதமர் மோடி அமைச்சரவையின் 2.0 செயல்பாடுகள் இன்றோடு தொடங்குகிறது. புதிய சுகாதாரத்துறை அமைச்சர், ஐடி அமைச்சர், சட்டத்துறை அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் என்று பல துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். இதனால் புதிய அமைச்சர்கள் எப்படி பணியாற்றுவார்கள், அரசின் கொள்கை எப்படி இருக்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications