மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் சிக்கல்.. புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..என்ன நடந்தது?
டெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா அளித்த புகாரின் பெயரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக குற்றாச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக எம்.பி பதவியில் இருந்தும் மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இதனிடையே அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா வெற்றி பெற்றார். இந்நிலையில்தான் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரசில் போலே பாபா நடத்திய ஆன்மிக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில், 121 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. இந்த இடத்தில், தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா ஆய்வு செய்தார். அப்போது, அவருக்கு குடை பிடித்தபடி ஒருவர் நின்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. இதை விமர்சித்து மஹுவா மொய்த்ரா பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் போட்டு இருந்தார்.
அவரது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதை டெலிட் செய்தார். எனினும், அந்த பதிவு தொடர்பாக சமூக வலைதள நிறுவனத்திடம் இருந்து காவல் துறை விவரங்கள் கோரியது. அதேபோல மகளிர் ஆணைய தலைவி, விளக்கம் கேட்டு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் மகளிர் ஆணைய தலைவி அளித்த புகாரின் அடிப்படையில், மஹூவா மொய்த்ரா மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதிய கிரிமினல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் கண்ணியத்திற்கு இழிவுபடுத்தும் விதமாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications