யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம்? விசாரணை குழுவில் சென்னை தலைமை ஹைகோர்ட் நீதிபதி - அறிவித்த ஓம் பிர்லா
டெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் மூட்டை மூட்டையாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அவரை பணி நீக்கம் செய்வது தொடர்பான எம்பிக்களின் கடிதத்தை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா ஏற்றுக்கொண்டார். மேலும் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை மேற்கொள்ள மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இடம்பெற்றுள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். தீ விபத்து பற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.

அப்போது ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகி கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து யஷ்வந்த் வர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அவர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டது. யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. இதையடுத்து பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிற்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் அவர்ஏற்க மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டி லோக்சபாவில் 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை இன்று ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968ன் கீழ் நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வநோக்கில் நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தற்போது குழு அமைத்துள்ளார். இந்த குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிவி ஆச்சார்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை மேல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ஓம்பிர்லா நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன் கீழ் இன்று வெளியிட்டுள்ளார். இந்த விசாரணை குழுவுக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் குறுக்கு விசாரணை செய்யவும் அதிகாரம் உள்ளது.
நம் நாட்டின் அரசியலமைப்பின் சட்டப்படி ஒரு நீதிபதியை அரசியலமைப்பின் ஆர்ட்டிக்கிள் 124(4) பிரிவின் கீழ் பதவி நீக்கம் செய்ய முடியும். இதற்கு முதலில் லோக்சபா மூலமாக கமிட்டி அமைக்க வேண்டும். அதன்படி தற்போது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி விசாரணை மேற்கொண்டு சபாநாயகரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கை லோக்சபாவில் எம்பிக்கள் முன்பு தாக்கல் செய்யடும்.
குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படும். சபையில் 3ல் இரண்டு பங்கு எம்பிக்கள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டளிக்கும் பட்சத்தில் தீர்மானம் வெற்றி பெறும். இதே நடைமுறை தான் ராஜ்யசபாவிலும் பின்பற்றப்படும். இருசபைகளிலும் பதவி நீக்க தீர்மானம் சக்சஸ் ஆகும் பட்சத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கம் செய்யப்படுவார்.
முன்னதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா விசாரணை அறிக்கை மற்றும் பதவி நீக்கம் செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications