சாதி சான்றிதழ்.. தமிழகத்தில் போலி சாதி சான்றிதழ் பெரிய பிரச்சனையாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி
டெல்லி: தமிழகத்தில், ஜாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. இந்த போலி சாதி சான்றிதழ் மிகப்பெரும் பிரச்னையாக உள்ளதாகவும், இது ஆபத்தானது என்றும் உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
பட்டியல் இனத்தின் ஒரு பிரிவான, இந்து கொண்டா ரெட்டி ஜாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக உச்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது..

இந்த மனுவானது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது:
"தமிழகத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் தன்னுடைய மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூகத்துக்கான ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார் .. தாசில்தார் முறையான விசாரணை மேற்கொண்டபோது, அந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவருக்கு ஜாதி சான்றிதழ் மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டை பிரதீபா நாடினார். அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், அந்த பெண்ணின் மகனுக்கு இந்து கொண்டா ரெட்டி சமூக ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. எனவே, எனவே "இந்து கொண்டா ரெட்டி சமூகம்" என்று சாதி சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்
இதை கேட்ட நீதிபதிகள், "தமிழகத்தில், போலி ஜாதி சான்றிதழ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இந்த போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நடப்பது தெரிகிறது.. இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்க முடியாது. இது மிகவும் ஆபத்தானது.
எனவே இந்து கொண்டா ரெட்டி சமூகம் என்ற பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள ஜாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து, ஜாதி சான்றிதழ் தொடர்பான மாநில அளவிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடை மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
தமிழ்நாடு 69% இட ஒதுக்கீடு.. உச்சநீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை.. விஜய்க்கு பெரிய சவால் -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!











Click it and Unblock the Notifications