காவிரி: "சீமான்" ஆதரவு கர்நாடகா எம்எல்ஏ தமிழ்நாட்டுக்கு துரோகம்- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
டெல்லி: காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீர் திறந்துவிட உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ 3,000 கன அடி நீர்தான் திறக்க முடியும் என்றது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரியில் சொற்ப நீரை கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் கர்நாடகா விவசாயிகளும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இது தொடர்பாக கர்நாடகா மேல்கோட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷன் புட்டண்ணய்யா டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். மேல்கோட்டை தொகுதியில் தர்ஷன் புட்டண்ணய்யா தேர்தலில் போட்டியிடும் போது தமிழ்நாட்டுக்கும் காவிரி நீர் திறக்க வேண்டும் என பிரசாரம் செய்தார். இதனால் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் புட்டண்ணய்யாவை ஆதரித்தும் பிரசாரம் செய்தனர். புட்டண்ணய்யாவின் வெற்றியையும் நாம் தமிழர் கட்சி கொண்டாடியது. ஆனால் தற்போது தர்ஷன் புட்டண்ணய்யா, தமிழ்நாட்டுக்கு தூரோகம் செய்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தர்ஷன் புட்டண்ணய்யா தரப்பு.
டெல்லி செய்தியாளர்களிடம் பேசிய தர்ஷன் புட்டண்ணய்யா, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் தரக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது. காவிரி படுகையில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனை உச்சநீதிமன்றத்தில் விவரிக்க இருக்கிறோம். கர்நாடகா வறட்சியால் குடிநீருக்கே தட்டுப்பாடு உருவாகி இருக்கிறது. கர்நாடகாவில் வறட்சி பாதித்த காவிரி படுகை பகுதிகளை காவிரி மேலாண்மை ஆணையம் நேரில் பார்வையிட வேண்டும். காவிரி பிரச்சனையில் எங்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றார்.
காவிரி பிரச்சனையில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸு துரோகம் செய்கிறது; அதனால் திமுக, காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிட வேண்டும் என்கிறார் சீமான். ஆனால் தற்போது சீமான் ஆதரித்த தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ.தான், கன்னட விவசாயிகள் சார்பாக தமிழ்நாட்டுக்கு எதிராக வழக்கே தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications