டெல்லியில் முட்டி மோதும் கர்நாடகா! மத்திய அமைச்சருடன் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு சந்திப்பு!
டெல்லி: காவிரி பிரச்சனை தொடர்பாக கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது. மேலும் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை கோரியும் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

கர்நாடகா அணைகளில் போதுமான நீர் இருந்தும் குடிநீருக்காக தேவை, வறட்சி பாதிக்கப்பட்டுள்ளது என கூறி தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட மறுக்கிறது அம்மாநில அரசு. காவிரி மேலாண்மை ஆணையம் 2 முறை உத்தரவிட்ட போதும் சொற்பமான நீரைத்தான் கர்நாடகா திறந்துவிட்டது. இதற்கே அதெப்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடலாம் என 2 வாரங்களுக்கும் மேலாக கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், ஏற்கனவே மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து காவிரி பிரசன்னையில் தலையிட வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் டெல்லியில் முகாமிட்டார். கர்நாடகாவின் அனைத்து கட்சி எம்.பிக்களுடன் சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் இன்று காலை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடகா மாநில அனைத்து கட்சிகளின் எம்.பிக்கள் குழு சந்தித்து பேசியது. இந்த சந்திப்பின் போது, காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
#WATCH | Delhi | Karnataka CM DK Siddaramaiah and Deputy CM DK Shivakumar meet Jal Shakti Minister Gajendra Singh Shekhawat.
— ANI (@ANI) September 21, 2023
The two leaders of Karnataka held an important meeting regarding the Cauvery River water sharing issue, in the national capital yesterday.
(Video: Office… pic.twitter.com/dN2GJWNgSJ
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் சட்டப்பூர்வமான போராட்டங்கள் மூலமே கடந்த காலங்களில் காவிரி நதிநீர் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. அதே போலவேதொடர்ந்து செயல்படுவோம் என்பது நிலைப்பாடு. கர்நாடகாவோ, சட்டப் போராட்டமே வேண்டாம்.. பேச்சுவார்த்தை நடத்தலாம் என பழைய நிலைமைக்கு அழைக்கிறது. கர்நாடகவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், நாம் முன்வைக்கிற கோரிக்கை எதனையும் கர்நாடகா காதிலேயே வாங்காது.. ஆகையால்தான் பேச்சுவார்த்தையே கூடாது; சட்டப் போராட்டம் எனும் ஆயுதமே நமக்கான வழி.. அதையே கெட்டியாக பிடித்துள்ளோம் என்கிறார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications