கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு 3,000 கன அடிநீர்- காவிரி ஒழுங்காற்று குழு மீண்டும் பரிந்துரை!
டெல்லி: காவிரியில் தமிழ்நாட்டுக்கு மேலும் 3,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அக்டோபர்
16-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்பது ஒழுங்காற்று குழுவின் பரிந்துரை.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை என்பது தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரைத் திறக்க வேண்டும் என்பது. இதனை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 3,000-க்கும் குறைவான அளவு நீர் திறதுவிடப்பட்டது. இதற்கு எதிராக மண்டியா, மைசூர் உள்ளிட்ட இடங்களில் கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதனிடையே காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் கேஆர்ஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்தது.

இதன்பின்னர் கர்நாடகா நேற்று முதல் திடீரென சுமார் 8,000 கன அடிநீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் அக்டோபர் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. தற்போது முன்கூட்டியே கூட்டப்பட்டுள்ளது.

காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறந்துவிட மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் தமிழ்நாட்டுக்கு அக்டோபர் 16-ந் தேதி முதல் அக்டோபர் 30-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடி, தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications