சாரதா நிதி நிறுவன முறைகேடு... கைதாகிறார் கொல்கத்தா போலீஸ் கமிஷனர்?
டெல்லி:சாரதா நிதி நிறுவன முறைகேடு விவகாரத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.
மேற்கு வங்கத்தை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த சாரதா நிதி நிறுவனம், தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

அந்த வழக்கில், நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் நளினி சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு பல முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதே நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கே.டி.சிங் தொடர்புடைய நிறுவனத்தின் 239 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியது.
இந் நிலையில், முறைகேட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 3 நாட்களாக அவரை காண வில்லை என்றும் தலைமறைவாகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ளவில்லை. சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் தொடர்புடைய விசாரணையில் அவரும் பங்கெடுத்துள்ளார்.
அதுதவிர... அந்த வழக்கை பல நேரங்களில் விசாரணையின் போது தாமதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 1983ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications