வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நிதி முறைகேடு.. வீடியோகான் சேர்மன் வேணுகோபால் தூத் மீது சிபிஐ எப்.ஐ.ஆர்
டெல்லி: ஊழல் வழக்கு தொடர்பாக வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சேர்மன் வேணுகோபால் தூத் மீது சிபிஐ இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளின் கூட்டமைப்புக்கு வேண்டுமென்றே நிதி இழப்பை ஏற்படுத்தியதற்காக இந்த எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை வாங்கியதில் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகளில் கூட்டமைப்பால் பிறகு கையகப் படுத்தப்பட்டன.
வங்கிகளின் கூட்டமைப்பிலுள்ள அதிகாரிகள், 'வீடியோகான் மொசாம்பிக்' என்ற வீடியோகானின் துணை நிறுவனத்தின், புரமோட்டர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.
லண்டனின் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு வேணுகோபால் தூத், 650 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், எஸ்பிஐ, ஐடிபிஐ மற்றும் ஐசிஐசிஐ ஆகிய மூன்று வங்கிகளும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிக்கு 705.45 மில்லியன் டாலர் செலுத்தியுள்ளன.
இந்த தொகையை செலுத்திவிட்டு, வீடியோகானின் ஆப்பிரிக்க சொத்துக்களை, மேற்சொன்ன வங்கிகள் கையகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், 2013ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், இந்த தொகையை வங்கிகள் செலுத்தியபோதிலும், அவர்கள், 2013ம் ஆண்டு நவம்பர் வரை சொத்துக்களை கையகப்படுத்தவில்லை. இது வங்கிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இடைப்பட்ட 9 மாதங்களில் வீடியோகானுக்கு முறைகேடாக, லாபத்தை ஏற்படுத்தியது. இந்த தகவல்கள் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications