8 மணி நேர டாஸ்க்.. முக்கிய விஷயங்களை கறக்க திட்டம்.. ப. சிதம்பரத்திற்கு அதிகாரிகள் கிடுக்குப்பிடி
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிகாலையில் இருந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் அதிகாலையில் இருந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். 40க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் ப. சிதம்பரம் வீட்டிற்குள் புகுந்து அவரை கைது செய்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் ப. சிதம்பரத்தை சிபிஐ நேற்று முதல்நாள் மாலையில் இருந்து தேடியது. ப. சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை என்பதால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யார்
இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு இந்த வழக்கில் ப. சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார். டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். இவரை சிபிஐ 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது.

புகார் என்ன
ஆனால் ப. சிதம்பரம் மீது வலுவான புகார் இல்லை. இதனால் ப. சிதம்பரம் கண்டிப்பாக பெயில் கிடைத்து ரிலீஸ் செய்யப்படுவார் என்று கூறுகிறார்கள். ஆகவே ப. சிதம்பரத்திடம் இப்போதே சிபிஐ தீவிரமாக விசாரித்து வருகிறது. அவருக்கு பெயில் கிடைக்கும் முன் முக்கியமான நிறைய விஷயங்களை திரட்ட சிபிஐ திட்டமிட்டுள்ளது.காலை 6 மணியில் இருந்து சிபிஐ ப. சிதம்பரத்தை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

8 மணி நேரம் முக்கியம்
நேற்று இரவு 1 மணி நேரம் விசாரணை நடந்தது. இன்று காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை விசாரணை நடக்க உள்ளது. இந்த 8 மணி நேரத்தில் அவரிடம் இருந்து முக்கியமான விஷயங்களை கறக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளை சிபிஐ கேட்டு வருகிறது.

முக்கிய விஷயம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப . சிதம்பரம் மீது வலுவான புகார் வைக்க வேண்டும். இதனால் அவரின் வாயில் இருந்து சில விஷயங்களை கறக்க வேண்டும். அப்போதுதான் வழக்கு வலுவாகும். இதனால் தற்போது ப. சிதம்பரம் நான்கிற்கும் மேற்பட்ட அதிகாரிகளால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications