ஷாருக் மகன் ஆர்யன் கானை கைது செய்த வான்கடே ஞாபகம் இருக்கா! அவர் மீது பாய்ந்தது வழக்கு! சிபிஐ அதிரடி
டெல்லி: ஆர்யன் கானை கைது செய்த சமீர் வான்கடே என்ற அதிகாரி மீது இப்போது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டில் மும்பையில் இருந்து கோவாவுக்கு சொகுசு கப்பலில் ரேவ் பார்டி எனப்படும் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்டி நடப்பது கண்டறியப்பட்டது. அங்கே என்சிபி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பிரபல சூப்பர் ஸ்டார் ஷாரூக் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் இதில் முதலில் கைது செய்தனர். இந்த வழக்கில் சில வாரங்கள் சிறையில் இருந்த பின்னரே ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டார்.
இருப்பினும், விசாரணை சமயத்திலேயே இந்த வழக்கில் சினிமாவுக்கு இணையான திருப்பங்கள் அரங்கேறின. குறிப்பாகப் போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானை மட்டும் விடுவிக்க ஷாருக் கானிடம் என்சிபி அதிகாரிகள் பேரம் பேசியதாகத் தகவல் வெளியானது. அப்போது மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே என்பவரே இதற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.
இது அப்போதே மிகப் பெரியளவில் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து சமீர் வன்கடே ஆர்யன் கான் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், அவர் மும்பை என்.சி.பி., தலைமையகத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்த வழக்குகளும் மற்ற அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. வான்கடே மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆர்யன் கான் வழக்கை முறையாக விசாரிக்கத் தவறியதாகச் சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே போதைப்பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே மீது சிபிஐ வெள்ளிக்கிழமை ஊழல் வழக்குப் பதிவு செய்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கானை சிக்க வைக்காமல் இருக்க வான்கடே உள்ளிட்டோர் ரூ. 25 கோடி லஞ்சம் கேட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை, டெல்லி, ராஞ்சி மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் முதன்மை புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து வான்கடே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆர்யன் கான் வழக்கில் அந்த சொகுசு கப்பலைச் சோதனை செய்த போது என்சிபி அமைப்பின் மும்பை மண்டலத் தலைவராக இருந்தார் தான் இந்த வான்கடே ஆவர். வான்கடே செய்த தவறுகள் குறித்து விசாரிக்க முன்னதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சிறப்பு டீம் ஒன்றை அமைத்திருந்தனர். அதில் ஆர்யன் கான் வழக்கில் இவரது விசாரணையில் 5 முறைகேடுகள் இருந்ததாகக் கூறப்பட்டது.
முதலில் சொகுசு கப்பலில் நடத்தப்பட்ட ரெய்டை அவர் வீடியோவா ரெக்கார்ட் செய்யவில்லை. அடுத்து ஆர்யன் கானின் மொபைலை ஆய்வு செய்ததிலும் முறையான விதிகள் பின்பற்றப்படவில்லை. இதில் கைது செய்யப்பட்டோர் போதைப் பொருட்களை எடுத்துக் கொண்டனரே என்பதை நிரூபிக்க டெஸ்டிங் நடத்தப்படவில்லை. நான்காவதாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் சிலர் பிறழ் சாட்சியாக மாறினர்.
முக்கியமாக ஆர்யன் கான் கைதின் போது, அவரிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை.. இருப்பினும், அனைவர் மீதும் ஒரே மாதிரியான வழக்குக்குள் பதிவு செய்யப்பட்டன. இவை தான் அவர் விசாரணையில் இருந்த தவறுகள் ஆகும்.












Click it and Unblock the Notifications