சத்தமின்றி கைமாறிய 820 கோடி? பிரபல தனியார் வங்கியில் என்ன நடந்தது.. களத்தில் இறங்கிய சிபிஐ! பரபரப்பு
டெல்லி: நமது நாட்டில் யூகோ வங்கி கணக்குகளில் இருந்து ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் முறையில் சுமார் ரூ.820 கோடி ரூபாய் முறைகேடாக அனுப்பப்பட்ட விவகாரத்தில் சிபிஐ இன்று அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
நமது நாட்டில் வங்கி கட்டமைப்புகள் ரொம்பவே வலுவாக இருக்கிறது. வங்கிகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து வருவதால் அதை எதாவது மோசடி நடந்தால் உடனடியாக அது கண்டுபிடிக்கப்படும்.

இதன் காரணமாகவே நமது நாட்டில் பல ஆண்டுகளாக வங்கிகள் திவால் ஆவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் வங்கிகள் சிக்கலில் மாட்டினாலும் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக உடனடியாக வங்கியை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள்.
யூகோ வங்கி: ஆனால், அதையும் தாண்டி வங்கிகளில் சில பல தில்லுமுல்லு வேலைகள் நடந்துள்ளன. அப்படியொரு சம்பவம் தான் இப்போது யூகோ வங்கியில் நடந்துள்ளது. இதற்கிடையே பல யூகோ வங்கிக் கணக்குகளில் இருந்து ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் முறையில் சுமார் ரூ.820 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ஏழு நகரங்களில் 67 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
கடந்த ஆண்டு நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை 4 நாட்களில் 8,53,049 ஐஎம்பிஎஸ் பரிமாற்றங்கள் நடந்துள்ளது. அதில் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏழு தனியார் வங்கிகளின் 14,600 கணக்குகளில் இருந்து ஐஎம்பிஎஸ் முறையில் பணம் வந்த நிலையில், அவை 41,000க்கும் மேற்பட்ட யூகோ வங்கிக் கணக்குகளின் தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யூகோ வங்கி புகார் அளித்துள்ளது.
ரெய்டு: இது குறித்து யூகோ வங்கி புகார் அளித்த நிலையில், அதன்படி கடந்த நவம்பர் 21ஆம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் காரணமாகப் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்படாமலேயே பல யூகோ வங்கிக் கணக்குகளில் ரூ. 820 கோடி வரவு வைக்கப்பட்டது. அதாவது சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து பணம் கழிக்கப்படாமல் இந்த யூகோ வங்கிக்கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
தங்கள் வங்கிக் கணக்கில் தவறாக வந்து விழுந்த தொகையை வங்கியிடம் திரும்பத் தராமல் சிலர் அந்த பணத்தை எடுத்து செலவு செய்துள்ளனர். இது குறித்து யூகோவை வங்கி புகாரும் அளித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தா மற்றும் மங்களூருவில் உள்ள யூகோ வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 13 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இந்தச் சூழலில் தான் இப்போது ராஜஸ்தான், பூனேவிலும் அதிரடி ரெய்டு நடத்தப்படுகிறது. இந்த சோதனையின் போது யூகோ வங்கி மற்றும் ஐடிஎஃப்சி தொடர்பான சுமார் 130 ஆவணங்களும், 40 மொபைல் போன்கள், 2 ஹார்ட் டிஸ்க்குகள், இன்டர்நெட் டாங்கிள் உள்ளிட்ட 43 டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
தீவிர விசாரணை: இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 30 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. வெறும் சில நாட்கள் இடைவெளியில் எப்படி இத்தனை ஆயிரம் பரிமாற்றங்கள் தவறுதலாக நடந்தது.. இதன் பின்னணியில் இருப்பது யார்.. இதில் எப்படி மோசடி நடந்தது என்பது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதன் விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
திரும்ப திரும்ப சிக்கும் இண்டஸ்இண்ட் வங்கி.. மீண்டும் மெகா மோசடி.. மோடி, ஆர்பிஐ வரை பறந்த கடிதம்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications