இடைக்கால ஜாமீன் இல்லை.. ப.சிதம்பரத்தின் காவலை செப்.5 வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: சிபிஐ காவலுக்கு எதிரான வழக்கில் சிதம்பரத்துக்கு செப்.5-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் இடைக்கால ஜாமீன் வழக்கிலும் செப்.5-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் கடந்த 12 நாட்களாக சிபிஐ காவலில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவரது சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பில் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை முன்ஜாமீன் வழக்கு வரும் 5-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே ப.சிதம்பரத்துக்கு 3 நாட்களுக்கு இடைக்கால ஜாமீனோ அல்லது வீட்டுக் காவலிலோ வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.
அப்போது நீதிபதிகள் ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதை அந்த நீதிமன்றம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஒரு வேளை ஜாமீன் கிடைக்காவிட்டால் அவரை சிபிஐ காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
மேலும் சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க வரும் 5-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அப்போது சிதம்பரத்தை நேற்று ஒரு நாள் வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார்.
மேலும் சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் இன்று மாலை 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார் நீதிபதி. அதன்படி ப.சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 5-ஆவது முறையாக ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து இடைக்கால ஜாமீன் தொடர்பான விசாரணை தொடங்கியது. அப்போது செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கெனவே சிபிஐ காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் செப்.5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications