10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து! போர் காரணமாக CBSE முக்கிய அறிவிப்பு! மாணவர்களே நோட் பண்ணுங்க
டெல்லி: வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், அந்நாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில், 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய பகுதிகளில் நிலையை உன்னிப்பாக ஆய்வு செய்த பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வுகளைப் பொறுத்தவரை, மார்ச் 7, முதல் மார்ச் 11 வரை திட்டமிடப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னர் ஒத்திவைக்கப்பட்ட மார்ச் 2, மார்ச் 5, மற்றும் மார்ச் 6, தேதிகளுக்கான தேர்வுகளும் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முறை குறித்து பின்னர் தனியே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
12ம் வகுப்புத் தேர்வுகளில், மார்ச் 7ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என வாரியம் குறிப்பிட்டுள்ளது. மார்ச் 9ம் தேதி முதல் நடைபெறவிருக்கும் தேர்வுகள் குறித்து, மார்ச் 7ம் தேதி வாரியம் நிலைமையை மறுபரிசீலனை செய்து தகுந்த வழிகாட்டுதல்களை வெளியிடும்.
12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கவனமாகப் பின்பற்றுமாறும் சிபிஎஸ்இ வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
சர்ச்சைக்கு நடுவே சிபிஎஸ்இ–க்கு புதிய தலைவர் – செயலாளர் நியமனம் – மத்திய அரசு உத்தரவு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications