டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் புராதன இடங்கள், அருங்காட்சியகங்களை மே 15ம் தேதி வரை மூட உத்தரவு!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா அதிகரித்து வருவதால் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னம், இடங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அசுர வேகம் எடுத்து வருகிறது. ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது.

Central Archaeological Department has ordered the closure of the site, which is an ancient monument until May 15

கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பள்ளி தேர்வுகளை ரத்து செய்து விட்டன. மகாராஷ்டிரா 15 நாட்கள் முழு ஊரடங்கு அறிவித்து விட்டது. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு என கூறப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி.. முதுகலை 'நீட்' தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி.. முதுகலை 'நீட்' தேர்வு ஒத்திவைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதால் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னம், இடங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. புராதன இடங்கள், அருங்காட்சியகங்களும் மே 15ம் தேதி வரை மூடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள உலகப்புகழ் பெற்ற மாமல்லபுரம், டெல்லியில் உள்ள தாஜ்மஹால், ஃபதேபூர் சிக்ரி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் மூடப்படுகின்றன.

English summary
The Central Archaeological Department has ordered the closure of the site, which is an ancient monument under the control of the Central Archaeological Department, until May 15 due to the rising covid 19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X