எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இனி.. அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்: மத்திய அரசு
டெல்லி: ஜூன் 25ம் தேதி இனி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அறிவித்திருக்கிறது. கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இதே தேதியில் எமர்ஜென்சியை அமல்படுத்தியிருந்தார்.
சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் ஜூன் மாதம் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது x தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

“1975ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்” என்று அமித்ஷா x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், சமீபத்தில் நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 400ஐ கைப்பற்றுவோம் என்று பாஜக கூறியிருந்தது. ஆனால், 400 தொகுதிகளில் வென்றுவிட்டால் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைத்துவிடும் என்று காங்கிரஸ் எச்சரித்திருந்தது.
மட்டுமல்லாது, இந்த மெஜாரிட்டி மூலம் அரசியல் சாசனத்தை மாற்றி, இடஒதுக்கீட்டை முழுமையாக பாஜக ரத்து செய்துவிடும் என்றும் காங்கிரஸ் எச்சரித்திருந்தது. இந்த பிரசாரம் எதிர்பார்த்தபடி பாஜகவின் வாக்கு வங்கியை அப்படியே முடக்கியது. இப்படியாக இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்ப பெரும்பான்மை பெறவில்லை. இப்படி இருக்கையில் காங்கிரஸை பழி வாங்கும் நோக்கத்தில் தற்போது அரசியல் சாசன படுகொலை தினத்தை பாஜக அறிவித்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக லோக்சபா தேர்தல் முடிந்து 18வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியபோது பிரதமர் மோடி எமர்ஜென்சி குறித்து பேசி காங்கிரஸை விமர்சித்திருந்தார்.
“இந்திய ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளி விழுந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்பு எப்படி அகற்றப்பட்டது, நமது நாடு ஒரே இரவில் எப்படி சிறைச்சாலையாக மாறியது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். மீண்டும் ஒரு முறை இதுபோல நடக்கக் கூடாது என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications