ஊசியே தேவையில்லை.. நேரடியாக மூக்கில் செலுத்தக் கூடிய கொரோனா வேக்சின்! மத்திய அரசு அனுமதி
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு மூக்கின் வழியே செலுத்தக்கூடிய பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளித்துள்ளது.
கொரோனாவில் இருந்து நாம் மெல்ல விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த சூழலில், கொரோனா வைரஸ் குறித்த அச்சம் இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்பு திடீரென வேகமாக அதிகரித்தே இதற்குக் காரணம்.
அங்கு இப்போது தினசரி 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கொரோனா வைரஸ்
சீனாவில் இந்தளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இது உலகெங்கும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்குக் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. பிரமதர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இது தொடர்பாகச் சுகாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், அனைவரும் பொது இடங்களுக்கு வரும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அறிவித்தார்.

பூஸ்டர் டோஸ்
இதற்கிடையே இப்போது பூஸ்டர் டோஸ் பணிகளையும் தீவிரப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வேக்சினால் கிடைக்கும் தடுப்பாற்றல் என்பது குறிப்பிட்ட காலத்தில் மெல்லக் குறைந்துவிடும். இதன் காரணமாக பூஸ்டர் டோஸ் ரொம்பவே அத்தியாவசியமான ஒன்றாகிறது. இந்தியாவில் முதல் இரண்டு டோஸை போட ஆர்வம் காட்டிய மக்கள் பூஸ்டர் டோஸ் போடப் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்தியாவில் சுமார் 28% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் போட்டுள்ளனர். அனைவரும் விரைவில் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அனுமதி
இதற்கிடையே கொரோனா வேக்சின் பணிகளில் பாரத் பயோடெக் நாசி தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த வேக்சினை எடுத்துக் கொள்ள ஊசி தேவையில்லை. இதை நேரடியாக மூக்கின் வழியே நம்மால் செலுத்த முடியும். இந்த வேக்சின் இன்று முதலே கொரோனா வேக்சின் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட கோவின் தளத்தில் சேர்க்கப்படும் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். இந்த வேக்சின் பூஸ்டர் வேக்சினாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

யாருக்கு
இந்த வேக்சின் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள மூக்கு வழியே செலுத்தக்கூடிய இந்த வேக்சின், இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் பூஸ்டர் டோஸ் ஆகும். இது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த வேக்சின் விலை குறித்து விரைவில் முடிவு செய்யப்பட உள்ளது. விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரவுள்ள நிலையில், அனைவரும் விரைவில் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications