இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி
டெல்லி: கொரோனா தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான பரிந்துரையை இந்திய மருந்து தரக்கட்டுபாடு அமைப்பு அளித்துள்ளது.
Recommended Video

இந்தியாவில் கொரோனாவால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகாவும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்தை புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அது போல் பாரத்பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் இந்த இரு தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டுக்கு பயன்படுத்த நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது.
இதையடுத்து இந்த இரு மருந்துகளையும் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. இதன் மூலம் அந்த இரு தடுப்பு மருந்துகளும் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மருந்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்த இரு தடுப்பு மருந்துகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் வைத்து பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு பிரிட்டன் அனுமதி அளித்த நிலையில் இரண்டாவது நாடாக இந்தியாவும் அனுமதி அளித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications