கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50000.. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை
டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில அரசுகள் ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச். ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. அந்தச் சமயத்தில் தினசரி பாதிப்புகளும் சரி, உயிரிழப்பும் சரி பல மடங்கு அதிகரித்து. இப்போது தான் நாட்டில் வைரஸ் பாதிப்பு சற்று கட்டுக்குள் உள்ளது.
நமது நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 3.3 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, இதுவரை 4.45 லட்சம் கொரோனா மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு தகவல்
கொரோனாவால் உயிரிழந்தோருக்கு இதுவரை மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நிவாரண நிதியையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில அரசுகள் ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுவரை ஏற்பட்ட கொரோனா மரணங்களுக்கு மட்டுமின்றி இதன் பிறகு ஏற்படும் கொரோனா மரணங்களுக்கும் இந்த இழப்பீடு பொருந்தும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

ரூ 50 ஆயிரம்ரூ 50 ஆயிரம் நிதியுதவி நிதியுதவி
இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மாநில அரசுகள் ரூ 50,000 வழங்கத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இதை மாநில அரசுகள் வழங்கும். மாவட்ட பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்தோ அல்லது மாவட்ட நிர்வாக அமைப்புகளின் மூலமோ வழங்கலாம். இதுவரை ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளுக்கு மட்டுமின்றி, மறு அறிவிப்பு வரும் வரை வரும் காலங்களில் ஏற்படும் கொரோனா உயிரிழப்புகளுக்கும் இது பொருந்தும்.

யாருக்கு வழங்கப்படும்
அதேபோல கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும். கொரோனா மரணம் எனச் சுகாதாரத் துறை குறிப்பிட்ட மரணங்கள் அனைத்திற்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தேவையான ஆவணங்களுடன் மாநில அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதை மாவட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழு சரிபார்ப்பார்கள்.

எப்படிப் பெறலாம்
தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்து உரிமைகோரல்களும் தீர்க்கப்பட வேண்டும், மேலும் ஆதார் இணைக்கப்பட்ட நேரடி பரிமாற்ற நடைமுறைகள் மூலம் நிவாரண நிதி அளிக்கப்படும். இது தொடர்பான புகார்களைத் துணை கலெக்டரை கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான குழுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண நிதி மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்" என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசின் இந்த பரிந்துரை கொரோனாவால் உழைக்கும் நபர்களை இழந்த ஏழை மட்டும் நடுத்தர வர்க்கத்தினருக்குப் பெரியளவில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகளும் சிறப்புத் திட்டங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications