சீனாவை நம்ப முடியாது.. மாற்று பாதையில் வேகமெடுக்கும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!
டெல்லி: இந்தியாவில் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது. ஆனால் இந்த வாகனங்களை தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருட்கள் சீனாவிலிருந்துதான் பெற வேண்டும். இந்நிலையில் சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க, இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மாற்று யோசனையை செயல்படுத்தியிருக்கின்றன.
மின்சார வாகனங்களை தயாரிக்க சக்தி வாய்ந்த காந்தங்கள் தேவை. இந்த காந்தங்களை இரண்டு வகைகளாக பிரிப்பார்கள். ஒன்று ஃபெரைட் காந்தம், இன்னொன்று நியோடிமியம் காந்தம்.

மின்சார வாகனங்கள்
இதில் இரண்டாவதாக சொன்ன நியோடிமியம் காந்தம்தான் மிகுந்த சக்தி வாய்ந்தது. மின்சார கார்களில் இந்த காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் சக்தி அதிகம் என்பதால், சிறிய மோட்டார்களை வைத்து அதிக பவரை இதனால் உருவாக்க முடியும். எனவே மோட்டாரின் அளவை சிறியதாக குறைத்து லேசானதாக வடிவமைத்து மின்சார வாகனத்தின் மொத்த எடையை குறைக்க இந்த காந்தங்கள் உதவுகின்றன. இதன் மூலம் மின்சார கார்கள் அதிக தூரம் வரை பயணிக்க முடியும்.
சக்திவாய்ந்த காந்தம்
பிரச்சனை என்னவெனில் இந்த காந்தங்கள் தயாரிக்க நியோடிமியம் போன்ற அரிய மண் காந்தங்கள் அவசியம். இது எல்லா நாடுகளிலும் கிடைப்பது கிடையாது. சீனாதான் மொத்த உலகத்துக்கே நியோடிமியம் சப்ளை செய்கிறது. சமீபத்தில் அமெரிக்காவுடன் ஏற்பட்ட பஞ்சாயத்தில் இந்த சப்ளை நின்றுபோனது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையை கடுமையாக பாதித்தது. இப்போது பிரச்சனை முடிந்து சப்ளை ஓரளவுக்கு சீராகி இருந்தாலும், இனியும் விநியோக தடை ஏற்படாது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது.
உற்பத்தியில் மாற்றம்
எனவேதான் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஃபெரைட் காந்தம் பக்கம் நகர்ந்திருக்கின்றன. இந்த வகை காந்தங்களை கொண்டு இலகு ரக வாகனங்கள், ஸ்கூட்டர்கள், மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்க முடியும். மிக முக்கியமாக இந்த காந்தங்களுக்கு சீனாவை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த வகை காந்தங்கள் கிடைக்கின்றன. எனவே சப்ளை தடை ஏற்படாது. இந்த காந்தங்கள் மோட்டார் சூடானாலும் வலுவாக இருக்கும். செலவும் குறைவு. எனவேதான் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த காந்தங்களை நோக்கி நகர்ந்துள்ளன.
அடி வாங்கிய இறக்குமதி
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் அதாவது, ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை சீனாவில் இருந்து வரும் காந்தங்களை இறக்குமதி 56 சதவீதத்தை இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் குறைத்து இருக்கின்றன. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த அளவுக்கு இறக்குமதி குறைந்தது கிடையாது. பஜாஜ் ஆட்டோ, ஓலா ஸ்கூட்டர், வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் சோனா காம்ஸ்டார் போன்ற நிறுவனங்கள் ஃபெரைட் காந்தங்களை நோக்கி நகர்ந்திருப்பதால் இறக்குமதி அடி வாங்கி இருக்கிறது.
சீன சார்பு
சோனா காம்ஸ்டார் நிறுவனம், ஃபெரைட் காந்தங்களை பயன்படுத்தி மோட்டார்களை வெற்றிகரமாக உருவாக்கி சோதனை செய்திருக்கிறது. இருப்பினும் இந்த மோட்டார்கள் முழுமையாக சந்தைக்கு வர குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும். அதுவரை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காந்தங்களின் அளவு குறையாது. எதிர்காலத்தில் இந்தியா சீனாவை சார்ந்திருப்பது முற்றிலுமாக குறைக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications