ஆயுதம் தேவையில்லை.. நிராயுதபாணியாவே வெளுப்பார்கள்.. சீன எல்லையில் இந்தியாவின் கட்டக் பிரிவு வீரர்கள்
டெல்லி: இந்தியா - சீன எல்லையில் மோதலில் ஈடுபட சீனா தற்காப்பு கலை படை வீரர்களை களம் இறக்கிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் நிராயுதபாணிகளாக மோதுவதில் வல்லவர்களான இந்தியாவின் ராணுவத்தில் உள்ள கட்டக் பரிவு வீரர்கள் லடாக் எல்லையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா - சீன எல்லையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று இரு நாடுகளிடையே ஒப்பந்தம் உள்ளது. இதனால் இரு நாடுகளிடையே பெரிதாக மோதல்கள் எழுந்தது இல்லை.
ஆனால் அண்டையில் இந்திய எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா ராணுவத்தினர், திடீரென கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று சண்டை போட ஆரம்பித்தனர்.

எல்லையில் ரோந்து
இதனால் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் அடிக்கடி கைலப்பு நடந்து வந்தது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்திய வீரர்களை எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட விடாமல் சீன வீரர்கள் கெடுபிடிகள் செய்து வந்தனர். இதனால் கடந்த ஜூன் 15 தேதி இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

20 வீரர்கள் மரணம்
இந்த மோதலில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் சுமார் 40 பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் சீனா இதுவரை எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவலை வெளியிடாமல் மறைத்துவிட்டது. ஒரு சில வீரர்கள் மட்டும் இறந்ததாக அப்போது கூறியது.

சீனாவின் தற்காப்புக்கலை வீரர்கள்
இந்நிலையில் ஜூன் 15ம் தேதி மோதல் நடப்பதற்கு முன்பு கிழக்கு லடாக் எல்லைக்கு சீனா தற்காப்புக்கலை பயின்ற வீரர்களை அனுப்பி வைத்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அத்துடன் சீன ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்க தற்காப்புக்கலை வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அடித்தே கொன்ற குர்தேஜ் சிங்
இதனிடைய இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனுக்குள்ளும் கட்டக் படை வீரர்கள் உள்ளனர். வழக்கமான காலாட்படை வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக சண்டை போடுவதில் இவர்கள் வல்லவர்கள் ஆவர். கட்டாக் கமாண்டோக்கள் ஒரு காலாட்படை பட்டாலியனின் ஈட்டியின் 'முனை' போன்றவர்கள் ஆவர். பாதுகாக்கப்பட்ட எதிரி நிலைகள் மற்றும் விமானநிலையங்கள் மற்றும் பீரங்கி தளங்கள் போன்ற மூலோபாய வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமை உடையவர்கள் ஆவர்.

ராணுவத்தில் முக்கியமானவர்கள்
இதனிடைய இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனுக்குள்ளும் கட்டக் படை வீரர்கள் உள்ளனர். வழக்கமான காலாட்படை வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆயுத இல்லாமல் நிராயுதபாணியான சண்டை போடுவதில் இவர்கள் வல்லவர்கள் ஆவர். கட்டாக் கமாண்டோக்கள் ஒரு காலாட்படை பட்டாலியனின் ஈட்டியின் 'முனை' போன்றவர்கள் ஆவர். பாதுகாக்கப்பட்ட எதிரி நிலைகள் மற்றும் விமானநிலையங்கள் மற்றும் பீரங்கி தளங்கள் போன்ற மூலோபாய வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமை உடையவர்கள் ஆவர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications