லடாக்கில் என்ன நடந்தது? அவசரமாக மீட்டிங் நடத்திய பிரதமர் மோடி.. விளக்கம் அளித்த அதிகாரிகள்!
டெல்லி: லடாக்கில் சீனா ஊடுருவ முயன்றது குறித்தும், லடாக்கில் நிலவி வரும் சூழ்நிலை குறித்தும் பிரதமர் மோடி அவசர மீட்டிங் நடத்தி இருக்கிறார்.
லடாக்கில் தற்போது இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பாங்காங் திசோவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் சீனாவின் படைகள் இன்னும் நிலை கொண்டு இருக்கிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

லடாக் சீனா
இந்த நிலையில் லடாக்கில் சீனா ஊடுருவ முயன்றது குறித்து பிரதமர் மோடி அவசர மீட்டிங் நடத்தி இருக்கிறார். இரண்டுக்கும் மேற்பட்ட கூட்டங்களில், பல்வேறு அதிகாரிகள் உடன் பிரதமர் மோடி பங்கேற்று இது தொடர்பாக ஆலோசனை செய்தார். அவசர அவசரமாக இந்த கூட்டம் நடந்துள்ளது. அதன்பின் லடாக்கின் துணை நிலை ஆளுநர் பிரதமர் மோடியிடம் விளக்கம் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விளக்கம் அளித்தார்
லடாக்கின் துணை நிலை ஆளுநர் ஆர்.கே மாத்தூர் பிரதமர் மோடியிடம் லடாக் சூழ்நிலை குறித்தும், சீன படைகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக அவர் டெல்லி அவசரமாக வந்துள்ளார். சீனா லடாக்கில் எப்படி ஊடுருவ முயன்றது. நிலைமை எப்படி இருந்தது. இந்திய படைகள் அதை எப்படி எதிர்கொண்டது விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் மோடி , லடாக் எல்லை பிரச்சனை குறித்து இதில் சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

கட்டுப்பாடு
தற்போது எல்லையில் சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே பிரதமர் மோடியிடம் துணை நிலை ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். எனினும் எல்லையில் தற்போது இந்திய ராணுவம் கூடுதல் கவனத்துடன் இருக்கும் என்று கூறுகிறார்கள். லடாக்கில் நேற்றும், நேற்று முதல் நாள் இரவும் சீனாவின் படைகள் அத்துமீற முயன்று உள்ளது. ஆனால் இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.

எத்தனை பேர்
சீன படைகள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு இந்திய படைகள் பாங்காங் திசோவில் படைகளை குவித்து உள்ளது. சீனாவின் 300 வீரர்கள் எல்லைக்கு வரும் முன்பே அங்கு இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையில் அத்துமீற முடியாமல், சீனா திரும்பி சென்றது. ஆனால் பாங்காங் திசோவின் தெற்கு பகுதியில் சீனாவின் படைகள் இன்னமும் இருக்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications