பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மக்கள் முன் உரை.. முக்கிய அறிவிப்பு வெளியிட வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் மோடி இன்று மாலை மக்கள் முன் உரையாற்றுவார். இன்று மாலை 4 மணிக்கு மக்கள் முன் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.

நாடு முழுக்க தொடர்ந்து கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுக்க ஆறாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூலை 31 வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

China standoff with India: PM Modi will address the nation tomorrow

கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா பிரச்சனை இருக்கும் நிலையில் இன்னொரு சீனாவுடன் இந்தியா கடுமையான மோதல் நிலவி வருகிறது.கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் கல்வான் பகுதியில் இந்தியா- சீனா இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. கட்டுப்பாட்டு பகுதி எண் 14க்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் இந்திய வீரர்களை மூர்க்கத்தனமாக தாக்கியது.

இந்த மோசமான சண்டையில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்று முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை. இதில் இருந்து இரண்டு நாடுகளுக்கு இடையில் கடுமையான பிரச்சனை நிலவி வருகிறது.

இந்த பிரச்சனை எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை மக்கள் முன் உரையாற்றுவார். இன்று மாலை 4 மணிக்கு மக்கள் முன் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவார்.

இந்தியா சீனா பிரச்சனை குறித்தும், கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+