சவுக்கிதாருக்கு வந்த சோதனை.. காவலாளிதான் திருடன்.. மோடிக்கு எதிராக ஐபிஎல்லில் அதிர்ந்த கோஷம்-வீடியோ
Recommended Video

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக ஐபிஎல் போட்டியின் போது பெரிய அளவில் கோஷங்கள் எழுப்பப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி தன்னையே சவுக்கிதார் என்று அழைத்துக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சவுக்கிதார் என்றால் காவலாளி என்று பொருள்.
இந்த பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் எல்லோரும் செய்து வருகிறார்கள். இதற்காக பாஜக தலைவர்கள் எல்லோருமே சவுக்கிதார் என்ற முன்னொட்டை தங்கள் பெயருக்கு முன் போட்டு இருக்கிறார்கள்.

காங்கிரஸ் என்ன
ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிராக வேறு மாதிரி பிரச்சாரம் செய்து வருகிறது. சவுக்கிதார் சோர் ஹேய் என்று பிரச்சாரம் செய்து வருகிறது. இதன் அர்த்தம் காவலாளிதான் திருடன் என்பதாகும். இதுவும் இணையத்தில் வைரலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று என்ன
இந்த நிலையில்தான் நேற்று ஐபிஎல் போட்டியில் சவுக்கிதார் சோர் ஹேய் என்ற கோஷம் எழுப்பப்பட்டு உள்ளது. நேற்று ஐபிஎல் போட்டியை பார்க்கக் வந்த மக்கள் பலர் இந்த கோஷத்தை எழுப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு பந்துகள் போடும் முன்னும் சவுக்கிதார் சோர் ஹேய் என்று கோஷம் எழுப்பி இருக்கிறார்கள்.
|
எங்கு போட்டி
இந்த கோஷம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியின் போது எழுப்பப்பட்டது. இந்த போட்டி ராஜஸ்தானில்தான் நடைபெற்றது. ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக மிக மோசமாக தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

வைரல்
இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பலர் அட, என்ன கிரிக்கெட் போட்டியில் கூட மோடிக்கு இவ்வளவு எதிர்ப்பு நிலவி வருகிறது என்று கூறுகிறார்கள்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications