எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.. காஷ்மீர் வழக்கில் அரசுக்கு தலைமை நீதிபதி சாட்டையடி!
ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இப்போதும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது.
அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட மனுக்கள் அதிக கவனம் பெற்றது.

விசாரணை
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நிலவுவது ஏன்?.ஒருவரை மற்றொருவர் சந்திப்பதில் என்ன தவறு. காஷ்மீர் மக்களுடன் இந்தியாவின் பிற பகுதி மக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.

ஏன் இப்படி
காஷ்மீரில் ஏன் தொலைத்தொடர்பு கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இருக்கிறது என்று அரசு விளக்க வேண்டும்.காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.இதற்காக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

கூடாது
இதை உடனே எதிர்த்து மத்திய அரசு வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.அதில், இது தொடர்பாக நீதிமன்றம் அதிகாரபூர்வ நோட்டீஸ்களை அனுப்பாமல் இருப்பதே நல்லது. அப்படி நோட்டீஸ் அனுப்பினால் அது இந்தியாவிற்கு எதிராக முடியும்.

கடும் எதிர்ப்பு
காஷ்மீர் விவகாரத்தில் அந்த நோட்டீசை மற்ற நாடுகள் எடுத்துக்காட்டாக பயன்படுத்தும்.பிற நாடுகளுக்கு இது சாதகமாக மாறும். இது மிக மிக முக்கியமான விஷயம். அதேபோல் மிகவும் கவனமாக இதை கையாள வேண்டும். இங்கே பேசுவதை ஐநாவில் எழுப்ப வாய்ப்புள்ளது. அதனால் இதில் நோட்டீஸ் அனுப்ப கூடாது என்று வழக்கறிஞர்கள் அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.

என்ன பதில்
இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாது. நாங்கள் அதிகாரபூர்வமாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புகிறோம். எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும், நாங்கள் உத்தரவை பிறப்பித்துவிட்டோம் என்று கூறினார். அதன்பின் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு 7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications