டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று சாட்டையை சுழற்றிய சுப்ரீம் கோர்ட்.. இன்று மாநிலங்களில் மெல்ல மெல்ல குறையும் தொற்று.. சபாஷ்

கேரளாவின் 10 வயது சிறுமியின் கடிதத்தை பாராட்டி உள்ளார் நீதிபதி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தபோது மாநில அரசுகள் செய்த தவறுகளை உடனுக்குடன் சுப்ரீம் கோர்ட் சுட்டி காட்டி கண்டித்தது.. அவைகளை எடுத்து சொல்லி திருத்தியது.. விளைவு, பெருமளவு மாநிலங்களில் தற்போது இதன் பலன் தென்பட்டு வருகிறது.

கடந்த மாதத்தைவிட, இந்த மாதம் இந்தியாவின் தொற்று பாதிப்பு குறைந்தே காணப்படுகிறது.. இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசின் செயல்பாடுகள்தான்.

அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் போட்டுவிடவும், அது பெருத்த பலனையும் பொதுமக்களுக்கு தந்து வருகிறது. தற்போது மெல்ல மெல்ல கொரோனா குறைந்து வருவதால், விதிமுறைகளுடன் கூடிய தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அமல்படுத்தி கொண்டிருக்கின்றன.

கொரோனா 3ம் அலையில்.. குழந்தைகள் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.. எய்ம்ஸ் இயக்குனர் கொரோனா 3ம் அலையில்.. குழந்தைகள் பாதிப்படைவார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை.. எய்ம்ஸ் இயக்குனர்

சிறுமி

சிறுமி

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு ஒரு லெட்டர் வந்துள்ளது.. அது கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து எழுதப்பட்டுள்ளது.. லெட்டரை எழுதியவர் கேரளமாநிலம், திரிச்சூரை சேர்ந்த 10 வயது சிறுமி லித்வினா ஜோசப்... இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

 சுப்ரீம்கோர்ட்

சுப்ரீம்கோர்ட்

அந்தக் கடிதத்தில்,"நான் தினமும் நியூஸ்பேப்பர் படிப்பேன்.. அப்போதுதான், டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் கொரோனா மரணங்கள் ஏற்படுவதை பார்த்து மிகுந்த கவலைப்பட்டேன்.. கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் சாமானிய மக்களின் துன்பங்கள் மற்றும் இறப்புக்களில் சுப்ரீம் கோர்ட் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் அறிந்து கொண்டேன்.

சுத்தியல்

சுத்தியல்

உங்களின் மாண்புமிகு நீதிமன்றம், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகத்திற்கு உத்தரவிட்டு ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளது.. உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த சிறுமி எழுதியுள்ளார். அதுமட்டுமில்லை, சுத்தியலால் கொரோனா வைரசின் தலையில் ஓங்கி அடிப்பது போலவும், மகாத்மா காந்தியின் ஒரு போட்டோவையும், சிறுமி தன் கையாலேயே வரைந்து அனுப்பியுள்ளார்...

சிறுமி

சிறுமி

சிறுமியின் கடிதத்தை பார்த்ததும் நீதிபதி நெகிழ்ந்துபோய்விட்டார். உடனே சிறுமியை பாராட்டி தலைமை நீதிபதியும் ஒரு பதில் எழுதி இருக்கிறார். அதில், "உன்னுடைய கடிதத்துடன், நீதிபதியின் பணியையே சித்தரிக்கும் மனதுக்கு இதமான ஓவியமும் கிடைக்க பெற்றேன்... நீ வருங்காலத்தில் நிச்சயமாக விழிப்புடன் கூடிய பொறுப்பான குடிமகளாக வளர்வாய்" என்று எழுதி, ஒரு பரிசையும் அனுப்பி பாராட்டி இருக்கிறார் ஜட்ஜ்..!

Recommended Video

    Corona Vaccineஐ இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும்: Modi அறிவிப்பு
    பலன்

    பலன்

    கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தபோது அரசுகள் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி உடனுக்குடன் திருத்தும் மிகப் பெரிய பொறுப்புகள் நீதிமன்றங்களுக்கு இருந்தது. அதனால் மக்களும் பலனடைந்தனர், நிம்மதியடைந்தனர்... குறிப்பாக மத்திய அரின் செயல்பாடுகளை சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து கூர்ந்து கவனித்துக் கண்காணித்து வருகிறது.

    சுப்ரீம்கோர்ட

    சுப்ரீம்கோர்ட

    அடிக்கடி, அந்தந்த மாநிலத்துக்குரிய உத்தரவுகளை பிறப்பித்து மத்திய அரசு விரட்டி விரட்டி வேலை வாங்கி வருகிறது... அதை விட முக்கியமாக மத்திய அரசு கடுமையாக சில கருத்துக்களை கூறிய நிலையில், அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற அறிவிப்பையே மத்திய அரசு பிரதமர் மோடி மூலமாக வெளியிட்டது.. இதெல்லாம்தான், இன்று நாட்டில் தொற்று பாதிப்பு குறைய காரணமாக இருந்து வருகிறது.. இதற்கு சுப்ரீம்கோர்ட்டுக்குதான் மிகுந்த நன்றியை சொல்ல வேண்டி உள்ளது.

    English summary
    Class 5 Kerala girls letter gets justice CJI writes back, and viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X