'டர்புலன்ஸ்'-ஐ அதிகரிக்கும் காலநிலை மாற்றம்.. இனி விமான பயணமே ஆபத்தானதுதான்! விஞ்ஞானிகள் வார்னிங்
டெல்லி: டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடுமையான டர்புலன்ஸ் மற்றும் ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இனி வரும் நாட்களில் டர்புலன்ஸ் பிரச்சனை அதிகரிக்கும் என்றும், காலநிலை மாற்றம் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆலங்கட்டி மழை காரணமாக இண்டிகோ விமானத்தின் மூக்குப்பகுதி உடைந்திருந்தாலும், டர்புலன்ஸ் பிரச்சனை பயணிகளின் உயிரையே பறித்திருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக, சாதுர்யமாக செயல்பட்ட விமானி, 277 பயணிகளின் உயிரை காப்பாற்றியிருக்கிறார்.

சிஏடி டர்புலன்ஸ் என்றால் என்ன?
காற்று மாறுபாடு காரணமாக விமானங்கள் குலுங்குவதைத்தான் டர்புலன்ஸ் என்று அழைக்கிறார்கள். வானில் காற்றின் வேகம் சீராக இருக்கும். புயல், சூறாவளி உள்ளிட்ட சமயங்களில் இதில் மாற்றங்கள் ஏற்படும். இதனை நம்மால் முன்கூட்டியே கணிக்க முடியும். எனவே பாதையை மாற்றி வேறு பாதையில் சீராக போக முடியும். ஆனால் விமானிகளுக்கும், மொத்த விமான துறைக்கும் இப்போது இருக்கும் பெரிய பிரச்சனை, CAT எனப்படும் தெளிவான காற்று கொந்தளிப்புதான்.
உயிரை பறித்த டர்புலன்ஸ்
அதாவது தெளிவான வானத்தில், சீரான வானிலையில் இந்த பிரச்சனை ஏற்படும். இதை முன்கூட்டியே கணிக்க முடியாது. இதில் சிக்கும் விமானங்கள் பயங்கரமாக குலுங்கும். கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்காவின் கீனி நகரத்திலிருந்து விர்ஜினியா மாகாணத்திற்கு 'பம்பார்டியர் சேலஞ்சர்' என்கிற பயணிகள் விமானம் 300 பயணிகளுடன் சென்றது. அது எதிர்பாராத விதமாக சிஏடி டர்புலன்சில் சிக்கியதில், ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையாக காயமடைந்தனர்.
இண்டிகோ விமானம் கற்ற பாடம்
அதை தொடர்ந்து தற்போது நடந்திருக்கும் இண்டிகோ விமான சம்பவம் டர்புலன்ஸ் பாதிப்புகளின் தீவிரத்தை உணர்த்தியுள்ளது. விமானத்தின் இறக்கைகளுக்கு கீழே சீரான வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் காற்று, திடீரென திசை மாறும்போது விமானம் சிஏடி டர்புலன்ஸை எதிர்கொள்ளும். மலை மீது மோதி காற்று மேலெழும்பும்போது அதன் திசை மாறுபடுகிறது அல்லவா, அதுபோன்று காற்று திசை மாற்றத்தின்போது இந்த பிரச்சனை ஏற்படும்.

விஞ்ஞானிகளின் ஆய்வு
டர்புலன்ஸ் பற்றி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 1979 மற்றும் 2020 க்கு இடையில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த சிஏடி டர்புலன்ஸ் சுமார் 55% அதிகரித்திருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளில் வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் மிதமான முதல் கடுமையான சிஏடி 60% முதல் 155% வரை அதிகரித்துள்ளது என இங்கிலாந்தின் பிரபல பல்கலைக்கழகமான 'ரீடிங் யுனிவர்சிட்டி' நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் விமானங்கள் சுமார் 68,000 முறை சிஏடி பிரச்சனையை எதிர்கொள்கிறது. இது இன்னும் அதிகரிக்கும். அடுத்த 50 ஆண்டுகளில் காற்றின் திசைவேகம் திடீரென மாறுபடுவது 17% முதல் 29% வரை அதிகரிக்கக்கூடும். இது வான் வழி பாதையை கரடு முரடானதாக மாற்றும்.

எதிர்கால விமான பயணம்
வெறும் குலுங்கல்தானே என்று இதை நாம் சாதாரணமாக விட்டுவிட முடியாது. காரணம் காற்றின் திசை மாற்றம் ஆலங்கட்டி மழையை கொடுக்கும் புயல்களை அதிக அளவுக்கு உருவாக்கும். இது மட்டும் நடந்தால் விமான பயணம் என்பதே சவாலானதாக மாறிவிடும். இதை சமாளிக்க விமான நிறுவனங்கள் கோடி கோடியாக செலவிட வேண்டி வரும். இது டிக்கெட் ரேட்டை உயர்த்தும். அப்படி பார்த்தால் எதிர் காலத்தில் கோடீஸ்வரர்கள் மட்டுமே விமானத்தில் போக முடியும் என்கிற சூழல் உருவாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications