சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார்.. சமூக நீதி மாநாட்டில் பரூக் அப்துல்லா புகழாரம்
டெல்லி: பெரியாரும், கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார். நாட்டின் நன்மைக்காக நாம் அனைவரும் அவர் பின்னே ஒன்றிணைய வேண்டும் என்று டெல்லியில் நடந்த சமூக நீதிக்கான தேசிய மாநாட்டில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்த முடியும் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தும் கருத்தாக உள்ளது.
இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சில மாநில முதல்வர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் அகில இந்திய தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சமூகநீதி கூட்டமைப்பு
கடந்த மார்ச் 1-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக டெல்லியில் அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாட்டை நடத்த முதல்வர் திட்டமிட்டு இருந்தார்.

19 கட்சிகள் ஆதரவு
இதில் பங்கேற்குமாறு பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. டெல்லியில் உள்ள மகராஷ்டிர மாநில அரசு இல்லத்தின் அரங்கத்தில் திங்கள் கிழமை மாலை இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 19 கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

ஒன்றிணைய வேண்டும்
மாநாட்டில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உள்ளிட்டோர் காணொலி காட்சி மூலம் பேசினார்கள். இந்த மாநாட்டில் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, பெரியாரும், கலைஞரும் பாதுகாத்த சமூக நீதியை முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாக்கிறார். நாட்டின் நன்மைக்காக நாம் அனைவரும் அவர் பின்னே ஒன்றிணைய வேண்டும்" என்றார்.

அனைத்து சக்திகளையும்
சிபிஐ கட்சி பொதுச்செயலாளர் டி ராஜா பேசுகையில், "அனைத்து சக்திகளையும் சமூக நீதி கோட்பாட்டில் இணைத்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். தமிழ்நாடு திருவள்ளுவர் மண், அயோத்தி தாசர் மண். பெரியார் மண்.சிங்காரவேலர் மண். அண்ணா மண்.கலைஞர் மண். இவர்கள் அனைவரும் சுயமரியாதைக்காக போராடியவர்கள். தற்போது அந்த பணியை முதல்வர் செய்கிறார்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications