கடைசிவரை கணவன் இறந்தது தெரியாமலேயே.. உயிரை விட்ட டீச்சர்.. ஒரே ஆஸ்பத்திரியில் அடுத்தடுத்த சோகம்
டெல்லியில் கொரோனாவால் தம்பதி உயிரிழந்துள்ளனர்
டெல்லி: தொற்று பாதிப்பு ஏற்பட்டு, கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் தொற்று அதிகமாகி உள்ளது.. இதனால் லட்சக்கணக்கோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது.. அங்கு வசித்து வருபவர் பவன் குமார்.. இவரது மனைவி பெயர் ஜசல்.. டெல்லியில் உள்ள மடா சுந்தரி காலேஜில் துணை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தவர்.

தொற்று
பவன்குமாருக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போகவும் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது.. அப்போதுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.. அதனால், ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை செய்ய குடும்பத்தினர் முயன்றனர்.. ஆனால, டெல்லியில் எந்த ஆஸ்பத்திரியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

மனைவி
இதனால், பவன் குமாரின் மனைவி ஜசல், தன்னுடைய கணவனை சண்டிகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளார்... அங்கு உடனடியாக, பவன் குமாருக்கு வெண்டிலேட்டர் வைக்கப்பட்டு சிகிச்சையும் நடந்துள்ளது.. இதனிடையே, அவரது மனைவி ஜசலுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.. எனவே, அவரும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

உறவினர்கள்
இந்நிலையில், தீவிரமான சிகிச்சை தந்தும், பவன்குமார் இறந்துவிட்டார்.. ஆனால், இந்த தகவலை, சிகிச்சையில் இருந்த மனைவியிடம் உறவினர்கள் யாரும் தெரிவிக்கவில்லை... இப்படியே 10 நாட்கள் கடந்துவிட்டது.. ஆனால், மனைவியும் சிகிச்சை இறந்துவிட்டார்.. கடைசிவரை கணவன் இறந்த விஷயம் மனைவிக்கு தெரியாது.

புரமோஷன்
உயிரிழந்த துணை பேராசிரியை ஜசலுக்கு, விரைவில் காலேஜில் புரமோஷன் கிடைக்க இருந்ததாம்.. இந்த விஷயம் தெரியாமலும், அவர் உயிரிழந்துவிட்டார்.. இதனால் உறவினர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் பெருத்த சோகத்தில் மூழ்கி உள்ளனர். அடுத்தடுத்து கணவன் - மனைவி ஒரே ஆஸ்பத்திரியில் இறந்த சம்பவம், அந்த பகுதியில் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications