நாளை இரவு 8 மணி வரை தான் டைம்.. இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.. பயணிகள் ஹேப்பி
டெல்லி: இண்டிகோ விமான சேவைகள் கடந்த 2ம் தேதி முதல் நேற்று வரை நாடு முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,000க்கும் அதிகமான விமானங்கள் ரத்தாகின. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் ரத்தான விமானங்களில்முன்பதிவு செய்த பயணிகளுக்கு நாளை இரவு 8 மணிக்குள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள முக்கிய விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ. இந்த விமான நிறுவனம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி முதல் தற்போது வரை இண்டிகோ விமான சேவைகள் நாடு முழுவதும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,000 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான நிலையங்களில் உள்ள இண்டிகோ ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி வருகிறது.
இதற்கிடையே தான் இண்டிகோ நிறுவனம் ரத்தான விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கான கட்டணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ரத்தான இண்டிகோ விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இன்னும் கட்டணம் திரும்ப வழங்கப்படவில்லை. இந்த டிக்கெட் கட்டணத்தை நாளை இரவு (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7) இரவு 8 மணிக்குள் திரும்ப வழங்க வேண்டும்.
அதேபோல் பயண திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பயணிகளிடமிருந்து எந்த மறு அட்டவணை கட்டணங்களையும் (Rescheduling Charge) வசூலிக்க கூடாது. டிக்கெட் கட்டணத்தை திரும்ப வழங்குவதில் தாமதம் உள்பட மேற்கூறிய விஷயங்களுக்கு நிறுவனம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications