காங்கிரஸ் மக்களை ஏமாற்றிவிட்டது.. பாஜக மக்களுக்காக ஆள்கிறது.. லோக்சபாவில் மோடி சரமாரி புகார்!

காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது, பாஜக 4 வருடத்தில் மக்களுக்கான ஆட்சியை அளித்துள்ளது என்று பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற உரையில் காங்கிரஸ் மீது சரமாரி புகார்களை வைத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றிவிட்டது, பாஜக 4 வருடத்தில் மக்களுக்கான ஆட்சியை அளித்துள்ளது என்று பிரதமர் மோடி தனது நாடாளுமன்ற உரையில் காங்கிரஸ் மீது சரமாரி புகார்களை வைத்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி இன்று பேசினார். நீண்ட நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் உரையாற்றினார்.

பிரதமர் மோடி முதலில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு வந்தார். ஆனால் திடீரென்று காங்கிரஸ் கட்சி மீது அவர் புகார்களை அடுக்க தொடங்கினார். அதன்பின் வரிசையாக காங்கிரஸ் மீது சரமாரி புகார்களை அடுக்கினார்.

வாக்காளர்

வாக்காளர்

2019 லோக்சபா தேர்தலில் வாக்களிக்கும் முதல் தலைமுறை வாக்காளர்களை வாழ்த்துக்கிறேன்.21ஆம் நூற்றாண்டில் பிறந்த இந்த வாக்காளர்களால் இந்தியா மேம்பட உள்ளது. இவர்களின் வாக்குகள்தான் இந்த தேர்தலை தீர்மானிக்கும். மிகவும் ஆரோக்கியமான தேர்தல் போட்டிக்கு நான் அழைப்பு விடுகிறேன்.

சூப்பர்

கடந்த நான்கரை ஆண்டுகளில் 10 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. வாகன உற்பத்தியில் உலகின் 4 வது பெரியநாடு இந்தியா.மொபைல் போன் உற்பத்தியில் 2 வது இடம் .5 மாதங்களில் 13 கோடி எரிவாயு இணைப்புகளை அரசு வழங்கி உள்ளது. ஏழைகளுக்காகவே தாம் வாழ்வதாகவும் அதற்காகவே தாம் இங்கு நின்றுள்ளது.

என்ன முன்னேற்றம்

என்ன முன்னேற்றம்

இரும்பு உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அரசு 55 ஆண்டுகளில் செய்யாததை பாஜக வெறும் 55 மாதங்களில் செய்துள்ளது.பொருளாதாரா அடிப்படையில் இந்தியா உலக அளவில் 11வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறி.

நான் நான்

நான் நான்

மோடி வெறுப்பு என்ற நிலைப்பாட்டில் எதிர்க்கட்சிகள் தேசத்தை வெறுக்கின்றன.காங்கிரஸ் கட்சி இந்திய ராணுவத்தை வெறுக்கிறது. ஆனால் நான்தான் மக்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்குவதாக குற்றச்சாட்டு வைக்கிறது.காந்தி காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவின் பாதுகாப்பு மீது அக்கறை இல்லை. இந்தியாவின் விமானப்படை மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. ரபேல் ஒப்பந்தத்தை ஏன் காங்கிரஸ் ரத்து செய்ய கோருகிறது. யாருடைய தேவைக்காக காங்கிரஸ் இப்படி குற்றச்சாட்டு வைக்கிறது. காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு நான் பதில் அளிக்க விரும்புகிறேன்.

காந்தியின் விருப்பம்

காந்தியின் விருப்பம்

காங்கிரஸ் இல்லாத நாடு வேண்டும் என்பது என் குறிக்கோள் இல்லை. காந்தியின் கனவை நிறைவேற்றுவதே என் குறிக்கோள். காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் சொத்துக்கள் கோடி கோடியாக கொள்ளையடிக்கப்பட்டது. பல பேர் ஏமாற்றினார்கள். ஆனால் பாஜக மக்களுக்காக ஆட்சி செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+