இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 வரி பாக்கி இருப்பதாக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை முடக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூ.200 கோடி வரி பாக்கி என்று கூறி காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை முடக்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி வங்கி கணக்கு முடக்குவது கட்சியை முடக்குவதற்கு சமம் என காங்கிரஸ் விமர்சித்திருந்தது.

இதனையடுத்து கடந்த 2017 முதல் 2021ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் வருமான வரியை மறுமதிப்பீடு செய்யும் வேலைகளை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்று உறுதியாக கூறிவிட்டது. இதனையடுத்து சில மணி நேரங்களில் ரூ.1700 வரி பாக்கி இருப்பதாக காங்கிரஸுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கையை, 'வரி பயங்கரவாதம்' என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், “பாஜக வரி பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருக்கிறது. காங்கிரஸை நிதி ரீதியாக முற்றிலுமாக முடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று விமர்சித்துள்ளார்.

இவரை தொடர்ந்து பேசிய கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கான், “வரி விதிப்பு சட்டங்களை பாஜக கடுமையாக மீறுகிறது” என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கோடிக்கணக்கில் நிதியை பெற்றிருந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சி தொடர்ந்த வழக்கில், தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது என்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் இந்த தேர்தலுக்கு பாஜகவால் நிதியை பெற முடியவில்லை என்றும், எனவே பழிவாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் கட்சியின் நிதி செயல்பாடுகளை பாஜக முடக்கியுள்ளதாகவும் அரசியில் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications