காங்கிரஸ் எங்களை பார்த்து பயப்படுகிறது.. மக்களின் சாய்ஸ் பாஜகதான்.. லோக் சபாவில் மோடி மாஸ் பேச்சு!
டெல்லி: காங்கிரஸ் நாட்டை நாசம் செய்துவிட்டது, பாஜகதான் அதை மீட்டெடுத்து வருகிறது என்று பிரதமர் மோடி லோக் சபாவில் பேசி இருக்கிறார்.
இன்று பிரதமர் மோடி லோக்சபாவில் குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் பிரதமர் மோடி பேசினார்.
பிரதமர் நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் உரையாடியதில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இந்த பேச்சு முழுக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துக்களால் நிறைந்து இருந்து இருந்தது.கடந்த கால காங்கிரஸ் ஆட்சி தொடங்கி ரபேல் ஊழல் புகார் வரை பல விஷயங்கள் குறித்து மோடி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

பயம்
மோடி தனது உரையில், காங்கிரஸ் பாஜகவின் நடவடிக்கைகளை பார்த்து பயந்து போய் இருக்கிறது. நாங்கள் மோசடி செய்தவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். காங்கிரசுக்கு நெருக்கமான பலர் இதனால் பாதிப்புக்கு உள்ளாவர்கள். அதனால் காங்கிரஸ் பாஜகவை பார்த்து பயத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

கூட்டணி ஆட்சி
மக்களுக்கு எதிர்கட்சிகள் சேரும் மெகா கூட்டணியின் ஆட்சி தேவையில்லை. அவர்களால் எதுவும் செய்ய முடியாது. மக்களுக்கு நிலையான பெரும்பான்மை கொண்ட பாஜக ஆட்சியே பிடிக்கும். எங்கள் ஆட்சியை அனுபவித்தவர்கள் ஏன் மெகா கூட்டணிக்கு வாக்களிக்க போகிறார்கள்.

மிக மோசம்
காங்கிரஸ்தான் எமெர்ஜென்சி கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் எதோ நான்தான் நாட்டை நாசம் செய்துவிட்டது போல பேசுகிறார்கள். காங்கிரஸ் பல முறை 356 சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தி இருக்கிறது. இந்திரா காந்தி மட்டுமே 50 முறைக்கும் மேல் மாநில அரசுகளை கலைத்து இருக்கிறார்.

நல்ல பாஜக
பாஜக மக்களுக்கு நல்லது செய்கிறது. அதை பொறுக்காமல் சிலர் பாஜகவிற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்தியாவிற்கு எதிராக பேசுகிறார்கள். இந்தியாவிற்கு எதிராக பேசுவதை மக்களோ, நானோ ஏற்க மாட்டோம். காங்கிரஸ் கட்சி பாஜகவின் பெரிய வளர்ச்சியை பார்த்து அச்சப்பட்டு போய் இருக்கிறது, என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications
