அம்பலமானது குஜராத் மாடல்.. ராகுல் காந்தி கடும் விமர்சனம்
டெல்லி: "குஜராத் மாடல்" அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டில் அதிக கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது குஜராத்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, குஜராத் மாடல் என்ற பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்துள்ளதால், இந்தியாவுக்கு அதுபோன்ற வளர்ச்சி கிடைக்க.. மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பாஜக பிரச்சாரமாக இருந்தது.
இந்த நிலையில், ராகுல் காந்தி குஜராத் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். முன்னதாக, நேற்று, ஐன்ஸ்டீனை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்: "அறியாமையை விட ஆபத்தான ஒரே விஷயம் ஆணவம்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி ட்வீட்
இன்று ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டரில், "கோவிட் 19 இறப்பு விகிதம்: குஜராத்: 6.25% மகாராஷ்டிரா: 3.73% ராஜஸ்தான்: 2.32% பஞ்சாப்: 2.17% புதுச்சேரி: 1.98% ஜார்கண்ட்: 0.5% சத்தீஸ்கர்: 0.35%. எனவே, குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது" என்று ராகுல் காந்தி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

இரண்டு மடங்கு அதிகம்
மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பில் குஜராத் நான்காவது மோசமான மாநிலமாகும். ஆனால், குஜராத் கொரோனா நோயாளிகள் இறப்பு விகிதம் மிக அதிகம். தேசிய சராசரியான 2.86 சதவீதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

குஜராத் நிலவரம்
கடந்த ஒரு மாதத்தில், குஜராத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 400 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் 24,104 கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,500 ஐ தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாக்டவுன் இல்லை
கேஸ்கள் அதிகரித்தாலும், லாக்டவுனை மறுபடி கடுமையாக்கப்போவதில்லை என்று முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் 75 சதவீதத்திற்கும் அதிகமான கேஸ்கள், அகமதாபாத்தில் பதிவாகியுள்ளன. இதுதான், அந்த மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும்.
அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையை மிகப்பெரிய சிறைச்சாலை என்று அம்மாநில ஹைகோர்ட் குறிப்பிட்டு அழைத்தது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications