டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் டெபாசிட் காலி! மிக மோசமான தோல்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 66 இடங்கிளில் 63 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்து படுதோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் ஷீலா தீட்சித் தலைமையில் ஆட்சி பீடத்தில் இருந்து காங்கிரஸை தேசிய தலைநகரான டெல்லி அடியோடு மறந்துவிட்டதாக தெரிகிறது.

டெல்லி சட்டசபை தேர்தல் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவியது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

2வதுமுறையாக தோல்வி

2வதுமுறையாக தோல்வி

ஒரு காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த காலத்தில் டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி பீடத்தில் இருந்து. கெஜ்ரிவால் மற்றும் அவரது ஆம் ஆத்மியின் எழுச்சியால் 2013ல் முதல்முறையாக ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் அதன்பிறகு அங்கு தொடர்ந்து படுதோல்வி அடைந்து வருகிறது.

63 தொகுதியில்

63 தொகுதியில்

2015ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூடவெற்றி பெறவில்லை. இந்நிலையில் 2020 தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. போட்டியிட்ட 66 இடங்களில் 63 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதன் மூலம் தேசிய தலைநகரான டெல்லியில் மறக்கடிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

அல்கா லம்பா தோல்வி

அல்கா லம்பா தோல்வி

டெல்லியில் காங்கிரஸ் போட்டியிட்ட 66 தொகுதிகளில் காந்தி நகரைச் சேர்ந்த அரவிந்தர் சிங் லவ்லி, பத்லியைச் சேர்ந்த தேவேந்தர் யாதவ், கஸ்தூர்பா நகரைச் சேர்ந்த அபிஷேக் தத் ஆகிய மூன்று வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட்டை காப்பாற்றினார்கள். மற்ற அனைவருமே டெபாசிட்டை பறிகொடுத்து மோசமாகவே தோற்றுள்ளார்கள். 2015 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி சார்பாக சாந்தினி சவுக் தொகுதியில் ன்ற அல்கா லம்பா கூட தனது டெபாசிட்டை பறிகொடுத்துவிட்டார்.

1000 ரூபாய் பணம்

1000 ரூபாய் பணம்

தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கைப் பெறத் தவறினால் ஒரு வேட்பாளர் தனது வைப்புத்தொகையை இழக்கிறார். சட்டமன்றத் தேர்தல்களில், வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன் ரூ .10,000 தேர்தல் ஆணையத்திற்கு டெபாசிட் செய்கிறார்கள், ஆறில் ஒரு பங்கு வாக்குகளைப் பெறத் தவறினால், அவர்களின் வைப்பு பறிமுதல் செய்யப்படுகிறது.

ப சிதம்பரம் வாழ்த்து

ப சிதம்பரம் வாழ்த்து

படுதோல்வி அடைந்த போதிலும் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சியடைவதாகத் தெரிகிறது, முக்கியமாக பாஜக தோற்றதால். காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக முட்டை வாங்கியபோதும் முடிவினை கொண்டாடுகிறது, காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் டெல்லி வாக்கெடுப்பு முடிவுகளைக் வரவேற்று ஆம் ஆத்மி கட்சியை வாழ்த்தி உள்ளார்.

முன்மாதிரி முடிவு

முன்மாதிரி முடிவு

டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து ட்வீட் செய்துள்ள ப சிதம்பரம், "ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ளது. மோசடி மற்றும் கொந்தளிப்பு தோற்றுள்ளது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்து வாழும் டெல்லி மக்கள் பாஜகவின் துருவமுனைக்கும், பிளவுபடுத்தும் மற்றும் ஆபத்தான முயற்சிகளை தோற்கடித்தனர். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்தலை நடத்தும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கிய டெல்லி மக்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். " என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+