ஆஹா.. பாஜகவுக்கு தான் ஓட்டுப்போட்டேன்.. சிரித்து கொண்டே சொல்லும் காங்கிரஸ் எம்எல்ஏ.. என்ன காரணம்?
பாஜக திரௌபதிவுக்கு ஓட்டுப்போட்டுள்ளார் காங்கிரஸ் எம்எல்ஏ முகமது மொகிம்
டெல்லி: காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர், பாஜகவின் திரௌபதிக்கு வாக்களித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.

குடியரசு தலைவர்
புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக நேற்றைய தினம், தேர்தல் நடைபெற்றது.. இதில், நாடு முழுவதும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.. காலை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நாடாளுமன்ற அலுவலகம் மற்றும் சட்டமன்ற அலுவலகங்களில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தலில் மத்திய அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தமிழ்நாடு
தமிழக சட்டசபை வளாகத்திலும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது.. என்டிஏ கூட்டணி கட்சிகள் தவிர, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் திரெளபதி முர்முவிற்கு தங்கள் ஆதரவை தந்துள்ளன.. எனவே, இந்த தேர்தலில் திரெளபதி முர்முவே பெரும்பான்மையினரின் ஆதரவை பெற்ற வெற்றியாளராகவே கருதப்பட்டு வருகிறார்...

யார் அவர்
எனினும், வரும் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது... வெற்றிபெறுவோர் குடியரசுத் தலைவராக 26ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.. இந்த தேர்தலில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான முகமது மொகிம், பாஜக வேட்பாளரான திரெளபதி முர்முவிற்கு வாக்களித்துள்ளாராம்..

பெருமை
இதை பற்றி அவரே செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "நான் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தாலும், பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்... சொந்த மண்ணுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று மனதில் மேலோங்கிய எண்ணத்தால் திரௌபதி முர்முவிற்கு வாக்களித்துள்ளேன்" என்று ஓபனாகவே சொல்லி உள்ளார்.. திரௌபதி முர்முவும், முகமது மொகிமும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்?
காங்கிரஸ் தரப்பின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்? கடந்த 4 நாட்களுக்கு முன்பேயே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தது, மிகப்பெரிய திருப்பத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தியிருந்தது... கடந்த ஜுன் 21ம் தேதி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை 17 கட்சிகளின் தலைவர்களுடன் சேர்ந்து ஜார்க்கண்ட் முதல்வரும், ஜேஎம்எம் கட்சியின் நிர்வாகத் தலைவருமான ஹேமந்த் சோரன் பரிந்துரை செய்த நிலையில், அந்த கட்சி உடனே தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொண்டிருந்தது.

பழங்குடி
அதன்படி, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க கட்சி முடிவு செய்துள்ளதாகவும், சோரன் மற்றும் முர்மு 2 பேருமே ஜார்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் ஆதிவாசி சமூகமான சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகின.. இது தொடர்பாக ஷிபு சோரன் எழுதியுள்ள கடிதத்தில், "சுதந்திரத்திற்குப் பிறகு ஆதிவாசிப் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராகப் பதவியேற்பது இதுவே முதல்முறை. இது நமக்கு பெருமைக்குரிய தருணம். எனவே நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு, அவருக்கு ஆதரவாக வாக்களிக்க கட்சி முடிவு செய்துள்ளது. அதனால், அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் ஜூலை 18-ம் தேதி அவருக்கு வாக்களிக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications