தேர்தல் வந்தாலே இதே வேலையா போச்சு.. தமிழகம், கேரளா என எல்லா பக்கமும் காங்கிரஸுக்கு சிக்கல் தான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு மட்டுமின்றி தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கல் வரிசைக்கட்டி நிற்கிறது. கேரளா, அசாம், மேற்கு வங்கம் என்று காங்கிரஸுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சனைகள் தான் சூழ்ந்து நிற்கிறது. காங்கிரஸுக்கு இப்படிப் பிரச்சனைகள் வர என்ன காரணம்.. இது காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை என 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே பிரச்சாரத்திற்கு முன்பே மாநிலங்களில் பிரச்சனை வரிசைக்கட்டி நிற்கிறது.

Congress Problems in election states Not only in tamil nadu issues growing in all election states

கேரளா

மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மணிசங்கர் ஐயர் கேரளத் தேர்தலில் இடதுசாரிகளே வெல்லும் என கூறியிருந்தார். காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என்றாலும், பிரனாயி விஜயன் அரசு பல சாதனைகளைச் செய்துள்ளதால் பினராயி விஜயன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்று கூறிச் சலசலப்பை ஏற்படுத்தினார். மணிசங்கர் ஐயர் இப்போது காங்கிரஸில் இல்லை என்று தலைமை விளக்கம் கொடுத்தாலும் அங்குச் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் குழப்பம் தொடர்கிறது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வி.டி. சத்தீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் பெயர்கள் இதில் அடிபடுகிறது. அங்குக் கோஷ்டி மோதலும் அதிகமாக இருப்பதால் இது காங்கிரஸ் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம் எனத் தெரிகிறது. கேரளாவில் இப்போது காங்கிரஸ் வெல்லப் பிரகாசமாக வாய்ப்புகள் உள்ள நிலையில், அங்குக் காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய பிரச்சனையாகவே மாறியிருக்கிறது.

அசாம்

சின்ன மாநிலமான அசாமிலும் காங்கிரஸுக்கு சிக்கல் தான்.. அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன், முன்னாள் மாநிலக் காங்கிரஸ் தலைவர் பூபன் குமார் போரா திங்கட்கிழமை காலை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அசாமில் கௌரவ் கோகோயை காங்கிரஸ் முன்னிறுத்தும் நிலையில், இதில் அப்சட்டான பூபன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கோகோயின் அதிகாரத் திமிரே தனது ராஜினாமாவுக்குக் காரணம் என வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டினார்.

தனது ராஜினாமா கடிதத்தைக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்திக்கு பூபன் குமார் அனுப்பியிருந்தார். தான் புறக்கணிக்கப்படுவதாகவும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் பூபன் குமார் கூறியிருந்தார். பிறகு ராகுல் காந்தியே நேரடியாகப் பூபன் குமாரிடம் பேசினார். அதன் பிறகே பூபன் தனது ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றார். ஆனால், அங்கு நெருப்பு அணைந்து உள்ளதே தவிர, புகை புகைந்து கொண்டு தான் இருக்கிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டிலும் சிக்கல் இருப்பது அனைவருக்கும் தெரியும். நீண்ட காலமாகப் பிரச்சனை இல்லாமல் இருந்த இந்தக் கூட்டணியில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.. அதிகாரப் பகிர்வுக்கு வாய்ப்பே இல்லை என்பதை திமுக திட்டவட்டமாகக் கூறிய பிறகும், காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து அதைப் பற்றிப் பேசுவது சர்ச்சையை அதிகரிக்கிறது. மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் பேச்சுகள் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

மேலும், காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைக்கவும் விரும்புகிறார்களாம். இதற்கான லாபியும் தீவிரமாக நடந்து வருகிறதாம். கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என டெல்லி தலைமை திட்டவட்டமாக அறிவித்த பிறகும், மீண்டும் மீண்டும் பேசுவது கூட்டணிக்குள் சலசலப்பை மேலும் மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெயரளவு மட்டுமே இருப்பது அனைவருக்கும் தெரியும். அங்குத் திரிணாமுல் உடன் கூட்டணி அமைப்பது மட்டுமே இப்போது காங்கிரஸுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. ஆனால், தேர்தலுக்கு முன்பு காங்கிரஸுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று மம்தா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் காங்கிரஸ் அங்குத் தனித்துக் களமிறங்குகிறது. இதுவும் காங்கிரஸுக்கு தலைவலி தான்!

இப்படித் தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு சிக்கல் தான் இருக்கிறது. மற்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் கவனம் செலுத்தி வரும் சூழலில், காங்கிரஸில் மட்டும் உட்கட்சிப் பூசல் தலைவலியாக மாறியுள்ளது. இதை தீர்க்கவில்லை என்றால் வெல்லும் வாய்ப்பு இருக்கும் மாநிலங்களும் கூட காங்கிரஸ் கையைவிட்டுப் போகவே வாய்ப்புகள் அதிகம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+