சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தானில் சொன்னது போல் மற்ற மாநிலங்களிலும் விவசாய கடன் தள்ளுபடி- காங்கிரஸ்
Recommended Video

டெல்லி: சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் சொன்னது போல் மற்ற மாநிலங்களிலும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சுமார் ஒரு வருடமாக மக்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி தயார் செய்தது. முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான 19 பேர் கொண்ட குழுவினர் தயார் செய்தனர்.
20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மக்களின் கருத்துகளை கேட்டு தயார் செய்யப்பட்டது. 54 பக்கங்கள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி டெல்லியில் உள்ள தலைமையகத்தில் வெளியிட்டது. அப்போது ராகுல் காந்தி பேசுகையில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றோம்.
அது போல் ஆட்சிக்கு வந்தவுடன் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டோம். இது போல் மற்ற மாநிலங்களிலும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம். விவசாயக் கடன்களை திருப்பி செலுத்தாதது கிரிமினல் குற்றமல்ல என்றார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications