வெகுண்டெழுந்த காங்கிரஸ் தொண்டர்கள்.. டெல்லியில் அமித் ஷா வீடு முற்றுகை.. இந்த அறிவிப்புதான் காரணம்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்புக் குழு (எஸ்பிஜி) பாதுகாப்பை மத்திய அரசு இன்று திரும்பப் பெற்றுள்ளது. தற்போது அவர்களுக்கு சிஆர்பிஎஃப் மூலம் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட எஸ்பிஜி சட்டம் ஆரம்பத்தில் பிரதமர் மற்றும் நாட்டின் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே பாதுகாப்பை வழங்கியது. ஆனால் பின்னர், சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு ராஜிவ்காந்தி, சோனியா காந்தி மற்றும் அவர் குடும்பத்தார் இந்த பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

இப்போது விரிவான ஆய்வுக்கு பிறகு இந்த சிறப்பு பாதுகாப்பை விலக்குவதாக அரசு கூறியுள்ளது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே உயரடுக்கு எஸ்பிஜி கமாண்டோக்களால் பாதுகாக்கப்படும் ஒரே நபராக இருப்பார்.
கடந்த ஆகஸ்டில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எஸ்பிஜி பாதுகாப்பை அரசு திரும்ப பெற்ற நிலையில், அடுத்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Delhi: Congress workers protest near Home Minister Amit Shah's residence against Govt's decision to withdraw SPG cover from the Gandhi family pic.twitter.com/OXy5WFFEef
— ANI (@ANI) November 8, 2019
இதனிடையே, இந்த நடவடிக்கையை கண்டித்து, டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வீட்டை காங்கிரசை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டனர். இதனால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அவர்கள் வேன்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டின் முன்னாள் பிரதமர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர் எனவேதான், காந்தி குடும்பத்திற்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் வழங்கினார். அதை தற்போது, மோடி & ஷா கூட்டணி கைவிடுவது தவறானது, என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications