சிறையில் மணீஷ் சிசோடியா.. அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால் சிக்கி கைதாவார்.. சுகேஷ் பரபரப்பு தகவல்
அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: மதுபான கொள்கை ஊழலில் அடுத்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இவர் இடைத்தரகர், பெரிய பணக்காரர்களிடம் தங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி அவர்களிடம் மோசடி செய்துள்ளார்.
இவர் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் டெல்லி திகார் சிறையில் இருந்தார்.

மருந்து நிறுவன உரிமையாளர்
மேலும் மருந்து நிறுவன உரிமையாளரின் மனைவியிடம் சிறையில் இருந்தபடியே சுகேஷ் சந்திரசேகர் ரூ 200 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த பணத்தில் அவர் பாலிவுட் நடிகைகளுக்கு செலவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் மோசடி செய்து பெற்ற இந்த பணத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுக போக வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிகிறது.

ரூ 10 கோடி
அந்த பணத்தில் சுமார் ரூ 10 கோடி வரை ஜாக்குலினுக்கு சுகேஷ் செலவு செய்தாராம். அது போல் நோரா பதேஹி உள்ளிட்ட நடிகைகளும் அந்த பணத்தில் பலன் பெற்றனராம். சுகேஷ் குறித்து திடுக் தகவல்கள் தெரிந்த போதும் அவருடனான உறவை நடிகை ஜாக்குலின் கைவிடவில்லை என விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சொகுசு வாழ்க்கை
இவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார். இதற்காக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார். அது முதல் இவருக்கும் டெல்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. ஆம் ஆத்மி மீது சுகேஷ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

ஆம் ஆத்மி
தென் தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியை வளர்ப்பதற்கு தன்னிடம் ஆம் ஆத்மி கட்சிகள் பணம் கேட்டதாகவும் அவ்வாறு பணம் கொடுத்தால் தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாக சுகேஷ் கூறியிருந்தார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்திருந்தார். இந்த நிலையில் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரூ 200 கோடி மோசடி வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சுகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

அடுத்தது கெஜ்ரிவால் சிக்குவார்
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய சுகேஷிடம் மணீஷ் சிசோடியா கைது குறித்து கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரசேகர், உண்மை வென்றது என கூறிவிட்டு அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் விரைவில் கைது செய்யப்படுவார் என பரபரப்பு தகவலை அளித்துள்ளார். சுகேஷ் போர்டீஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் மல்வீந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைக்க ரூ 3.5 கோடி தருமாறு அவருடைய மனைவி ஜாப்னா சிங்கிடம் பெற்றதாக கடந்த ஆண்டு சுகேஷ் கைது செய்யப்பட்டார். இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான சுகேஷ் அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளில் கைதாகி வருகிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications