டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3வது இடத்திற்கு வேகமாக முன்னேறும் இந்தியா.. ஒரே நாளில் 15,000 + கொரோனா கேஸ்கள்.. ஷாக்கிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 15612 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் தீவிரமாக அதிகரித்து வருகிறது. அதிலும் இந்தியாவில் தினசரி வரும் கேஸ்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.

Coronavirus: 15000 plus cases added yesterday, Total cases in India reaches 456,062

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவுகிறது. இதனால் விரைவில் இந்தியா இந்த பட்டியலில் மூன்றாம் இடம் வரும் என்கிறார்கள்.

இந்தியாவில் மொத்தம் கொரோனா காரணமாக 456,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 15,612 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 468 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 14,483 பேர் இதுவரை இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 3214 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 1,39,010 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6531 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் நேற்று புதிதாக 3657 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 66602 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 2301 பேர் பலியாகி உள்ளனர்.

இன்னும் ஒரு வாரம்தான்.. 1 கோடியை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை.. உலகம் முழுக்க படு வேகத்தில் கொரோனா!இன்னும் ஒரு வாரம்தான்.. 1 கோடியை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை.. உலகம் முழுக்க படு வேகத்தில் கொரோனா!

தமிழகத்தில் நேற்று புதிதாக 2516 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 64603 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 833 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் நேற்று புதிதாக 549 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 28429 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதுவரை 1711 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Coronavirus: 15000 plus cases added yesterday, Total cases in India reaches 456,062 cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X