ஏடிஎம்மில் பணம் எடுத்தனர்.. மறுநாளே 3 ராணுவ வீரர்களுக்கு பரவிய கொரோனா.. குஜராத்தை உலுக்கிய சம்பவம்!
ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த பின் குஜராத்தில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காந்தி நகர்: ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த பின் குஜராத்தில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கொரோனா இந்தியாவில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. ஒரே வாரத்தில் 10 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,530 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 780 பேர் பலியாகி உள்ளனர்.

ராணுவ வீரர்கள்
இந்த நிலையில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்த பின் குஜராத்தில் 3 ராணுவ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பரோடாவில் இருக்கும் ஏடிஎம் ஒன்றில் இவர்கள் பணம் எடுத்துள்ளனர். இவர்கள் வெளிநாடு அல்லது வெளிமாநிலம் எங்கும் செல்லவில்லை. இவர்கள் மூவரும் ஒன்றாக இணையும் புள்ளி அந்த ஏடிஎம் மட்டும்தான் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஏடிஎம் எப்படி
அந்த குறிப்பிட்ட ஏடிஎம்மில் பணம் எடுத்த பின்புதான் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த ஏடிஎம் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த ராணுவ வீரர்கள் தொடர்பு கொண்ட மற்ற ராணுவ அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குஜராத்தின் வதோதராவில் இருக்கும் ராணுவ வீரர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வேறு யார் எல்லாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அதேபோல் இந்த மூன்று ராணுவ வீரர்கள் தொடர்பு கொண்ட 26 பொதுமக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஏடிஎம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏடிஎம்மில் பணம் எடுத்தவர்கள் தாமாக முன் வந்து தகவல் அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா உதவியுடன் அங்கு வந்தவர்கள் யார் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

பணம் மூலம்
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பணம் மூலம் கொரோனா பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகில் சீனா உட்பட பல நாடுகளில் ரூபாய் நோட்டுகளை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. சீனாவில் இதனால் தற்போது டிஜிட்டல் கரன்சிகள் கூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது ஏடிஎம் மூலம் மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications