அறிகுறியே இல்லை.. ஏர் இந்தியா விமானிகள் ஐந்து பேருக்கு திடீர் கொரோனா பாதிப்பு.. புதிய சிக்கல்!
டெல்லி: ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பல்வேறு வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா வந்தே பாரத் மிஷன் ஆபரேஷனை மத்திய அரசு தொடங்கி உள்ளது. மலேசியா, சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்காவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி கடந்த மே 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

வரும் 13ம் தேதி வரை இந்த மீட்பு பணி நடக்கும். பல நூறு இந்தியர்கள் இதுவரை வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று மொத்தம் 77 விமானிகளுக்கு சோதனை செய்யப்பட்டது. இதில் பலர் மூத்த பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஐந்து பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறியே இல்லை. அறிகுறியே இல்லாமல் இவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற விமானிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த ஐந்து விமானிகளும் ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை ஓட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர்கள் கடந்த ஏப்ரல் 20ம் தேதி விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.
இந்த விமானம் மீட்பு பணிகளில் ஈடுப்பட்டதாகவும், அவசர அரசு தேவைக்கு இயக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு கொரோனா வந்திருக்கலாம். இந்தியாவில் விரைவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்கிறார்கள். இந்த நிலையில் விமானிகள் 5 பேருக்கு கொரோனா இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications