இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவால் மொத்தம் 13,835 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவின் பாதிப்பு 3,000- த்தை தாண்டியுள்ளது. மொத்தம் 3205 பேர் கொரோனாவால் இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 300 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 194 ஆகியுள்ளது.
மகாராஷ்டிராவை தொடர்ந்து டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ளது. டெல்லியில் 1640, தமிழகத்தில் 1267, மத்திய பிரதேசத்தில் 1120, ராஜஸ்தானில் 1308, குஜராத்தில் 1021, உத்தரப்பிரதேசத்தில் 846 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆந்திராவில் 14 பேரும் டெல்லி மற்றும் கோவாவில் தலா 38 பேரும் மரணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் 13; மத்திய பிரதேசத்தில் 57; பஞ்சாப்பில் 13; ராஜஸ்தானில் 11; தமிழகத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலுங்கானாவில் 18 பேரும் உபியில் 14 பேரும் மேற்கு வங்கத்தில் 10 பேரும் கொரோனாவின் தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1767 என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications